நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் (பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால்)

Share this page with friends

ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பாலகன் பிறக்கிறான்.  அவரவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.  அந்த பாலகன், அந்த வீட்டுக்கு மட்டும்தான் சொந்தம்.  அந்தக் குடும்பம்  மட்டுமே அவனை உரிமை கோரலாம்.  அள்ளியெடுத்து அணைத்துக் கொஞ்சலாம்.  இது இயல்பான வாழ்க்கை.

கிறிஸ்துமஸ் காலங்களில், பல இடங்களில் கிறிஸ்துமஸ் பாலகனை அட்டைப் பெட்டியிலிருந்து வெளியே எடுத்து, தூசி தட்டி ஷோ கேஸ்களில் வைப்பார்கள்.  இது பொம்மைப் பாலகன்.  Christmas season முடிந்தவுடன் மீண்டும் அட்டைப் பெட்டியில் அடக்கிவிடுவார் கள்.  New Year Season ஆரம்பமானவுடன் Happy New  Year பதாகைகளை தொங்கவிடுவார்கள்.   இது சிலருக்கு அலங்கார வாடிக்கை. 

ஈராயிரம் ஆண்டுகளாக இறைமகனின் பொம்மைக் காட்சியை மட்டும் படைக்கும் மாட்டுத்தொழுவ உள்ளங்கள் இன்னும் மாறவில்லையே.  மாட்டுத் தொழுவச் சூழ்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இப்படித்தான் தொடங்குகின்றன.

மனந்திரும்பாத மக்கள் மனம். அவர்களின் அரங்க நாடகம் ஆண்டுதோறும் அரங்கேறுகிறது.  காலங்கள் மாற மாற, கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள் பாரம்பரியப்படி திசைதிருப்பப்படும் நிகழ்வுகளாக மாறிக்கொண்டிருக் கின்றன. ஆனால் அதைக் கொண்டாடும் மக்களின் மனம் இன்னும் கிறிஸ்துவற்ற மாட்டுத் தொழுவங்கள்தான். 

கிறிஸ்துவுக்குக் கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு (Santa Claus) கொடுக்கப்பட்டு திசை திருப்பப்படுகிறது.

எத்தனையோ தேசங்களில் சிலுவையை அகற்றிவிட்டு, வேத வசனங்களை அகற்றிவிட்டு, கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மையை உயரத்தில் வைக்கிறார்கள்.  உன் துயரத்தில் உதவி செய்கிறவர் கிறிஸ்துமஸ் தாத்தா அல்ல. கிறிஸ்துவானவர் என்பதை மறந்துவிடாதே.  

கர்த்தருக்கு நீ கொடுக்கிற கனம் எங்கே? அவரை மட்டும் மாட்டுக் கொட்டிலில் மறைத்துவைத்துவிட்டு, நீ நடத்தும் ஆடம்பரத்துக்கு அளவில்லையே.  அவருக்கும் மாட்டுக் கொட்டிலுக்கும் என்ன சம்பந்தம்? கிறிஸ்தவ சமுதாயம் யோசிக்கிறதா? சத்திரத்தின் முன்னணை என்பது அனைத்து ஜனங்களும் பார்க்கும்படியாகவும் எல்லா மக்களும் வந்துபோகும்படியாகவும் உள்ள இடம்.  இயேசு பாலகன் நமது பாலகன்.  

பூமியே, செவிகொடு; கர்த்தர் பேசுகிறார்; நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன்; அவர்களோ எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்கள். மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது (ஏசாயா 1:2,3). 

நீ உலக மாயையிலும் பாவத்திலும் சாபத்திலும் கட்டப்பட்டிருக்கிற நிலைமையை உணராமல், மாட்டையும் கழுதையையும் ஆட்டையும் கட்டிப்போட்டு, தொழுவம் அமைத்து, அதில் உன்னை மறைத்து, இயேசு பாலகனைப் பொம்மையாக வைத்து அழகுபார்க்கிறாயே எத்தனை நாட்களுக்கு இந்தப் பொம்மலாட்டம்?

அவர் உன் பாவங்களை மன்னிக்கிற, உன் ஆத்துமாவை இரட்சிக்கிற இயேசு கிறிஸ்துவாக உலகத்தில் பிறந்தார் என்கிற உண்மை உன் சொந்த வாழ்க்கையில் நிறைவேறியுள்ளதா? கிறிஸ்து அவதரித்தது நமக்காக, நம் ஒவ்வொருவருக்காக. இது உன் சொந்த வாழ்க்கையின் அனுபவமாக மாறட்டும்.

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் (யோவான் 3:16).

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும் (ஏசாயா 9:6)

PASTOR S. VICTOR JEYAPAL

வழிப்போக்கனின் வார்த்தைகள் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. தொகுப்பு : பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்

மக்கள் அதிகம் வாசித்தவை:

Jesus makes the difference - Christian Quotes
நெகேமியா எப்படி 52 நாளில் அலங்கத்தை கட்டி முடித்தார்?
தமிழக அரசுக்குப் பேரிடர் காலக் கோரிக்கைகள்
கோழி கீழி கிடைக்குமா?... வித்யா'வின் சமூகப் பார்வை
அன்பையும், கருணையையும் மற்றவர்கள் மீது பொழிவோம் - ராமதாஸ், அன்புமணியின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!
எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்
கோவில்பட்டியில் தவக்கால திருயாத்திரை நடைப்பயணம்
இயேசு கிறிஸ்து சீடர்களுக்கு எதை வைத்துப் போனார்?
கிறிஸ்துவர்களும் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்; மலேசிய உயர் நீதிமன்றம் தீர்ப்பு
நோக்கம் சிதைக்கப்படும்போது அன்பின் வடிவமான ஏசுநாதரே கோபப்பட்டார்! - டி.டி.வி தினகரன்

Share this page with friends