உ.பி : பள்ளி மாணவர்கள் இந்து மதவெறி உறுதிமொழி !

Share this page with friends


January 3, 2022

இந்து ராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கும் காவிக் கும்பல் பள்ளி மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்க இதுபோன்ற காணொளிகளை பரப்பி கொத்தளிப்பான மனநிலையை உருவாக்குவதே அவர்களது உடனடி நோக்கம்

இந்து ராஷ்டிரத்தை உருவாக்க “போரிடுவோம், சாவோம் மற்றும் கொல்வோம்” என்று பள்ளி சிறுவர்கள் உறுதிமொழி எடுக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள ஓர் தனியார் பள்ளியில் டிசம்பர் 28-ம் தேதியன்று எடுக்கப்பட்ட ஓர் காணொளியில், மெருன் கால்சட்டை மற்றும் வெள்ளைச் சட்டை மற்றும் சாதாரண உடையில் உள்ள சிலர் உட்பட்ட பள்ளிச் சீருடையில் சிலர் என 24 சிறுவர், சிறுமிகளுக்கு ஒருவர் உறுதி மொழியை எழுப்புகிறார். முன்பக்கத்தில் சில சின்னஞ்சிறு குழந்தைகள் நிற்கிறார்கள்.


குழந்தைகள் தங்கள் வலது கையை முன்னோக்கி நீட்டி இந்தி மொழியில் இந்த உறுதிமொழியை எடுத்துக் கொள்கிறார்கள். “இந்த நாட்டை இந்து ராஷ்டிரமாக்குவதற்கும், எந்த விலை கொடுத்தாலும் அதை முன்னேற்றுவதற்கும் எங்கள் வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை போராடவும், சாகவும், தேவைப்பட்டால் கொல்லவும், எந்தத் தியாகத்துக்கும் தயாராக இருப்போம் என்று உறுதிமொழி கொடுக்கிறோம். ஒரு கணம் கூட பின்வாங்க மாட்டோம். எங்கள் குருதேவ், எங்கள் குல் தேவதா (குடும்பக் கடவுள்), எங்கள் கிராம தேவதா (கிராமக் கடவுள்) எங்கள் முன்னோர்கள் மற்றும் பாரத மாதா எங்களுக்கு வலிமையையும் வெற்றியையும் தரட்டும்” என்று உறுதிமொழி எடுக்கின்றனர் மாணவர்கள்.

உத்தரப் பிரதேசம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள ராபர்ட்கஞ்சில் உள்ள விம்லா இன்டர் கல்லூரி எனும் தனியார் பள்ளியின் மேலாளர் ஜிதேந்திர சிங், சுதர்சன் எனும் செய்தி ஊடகத்தில் இருந்து தாங்கள் வருவதாக அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு குழுவினர் பள்ளியிலிருந்து சிறுவர்களை அருகிலுள்ள பூங்காவிற்கு ஓர் விவாதம் நடத்த அழைத்து செல்வதற்கு கேட்டதாகக் கூறினார்.
“டிசம்பர் 28 அன்று மதியம் பள்ளி மூடப்படும் நிலையில் பள்ளி வாயிலில் சிலர் மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்ததை பார்த்தேன். என்ன நடக்கிறது என்று கேட்டேன். அவர்கள், தாங்கள் சுதர்சன் நியூஸ் சேனலை சேர்ந்தவர்கள் என்று சொன்னார்கள்.

மேலும் மாணவர்களை ராஷ்டிர தர்மம், தேசிய கடமை பற்றிய விவாதத்திற்காக அருகிலுள்ள சாச்சா நேரு பூங்காவில் கூட வேண்டும் என்று அழைத்தனர். தொலைக்காட்சி நிருபர்கள் என்று கூறியவர்கள் மக்களிடம் நேர்காணல் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். எனவே மாணவர்களிடன் விவாதிப்பதாக கூறியதை நான் தடுக்கவில்லை. பின்னர், எங்கள் பள்ளியைச் சேர்ந்த ஐந்து பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களும், ஐந்து பதினோராம் வகுப்பு மாணவர்களும் பூங்காவில் இருப்பதாக தகவல் வந்தது” என்கிறார் ஜிதேந்திர சிங்.


ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் நடத்தும் பள்ளியின் முதல்வர் ஷிவ் நாரயண் லால் கூறியதாவது, “இதுபோன்ற வன்முறை சித்தாந்தத்தை ஆதரிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. எங்கள் மாணவர்கள் பூங்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது எங்களுக்குத் தெரியும் ஆனால் செய்தி சேனலைச் சேர்ந்தவர்கள் மாணவர்களை இதுபோன்று உறுதிமொழி எடுக்க வைப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது” என்றார்.


இந்த சம்பவம் தொடர்பாக யாரும் இதுவரை புகார் கொடுக்காததால் யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுகிறது சோன்பத்ரா மாவட்ட போலீசு.
நாடு முழுவதும் இந்து ராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கும் காவிக் கும்பல் பள்ளி மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்க முயற்சிக்கிறது. இதுபோன்ற காணொலிகளை திட்டமிட்டு எடுத்து மக்களிடையே கொத்தளிப்பான மனநிலையை உருவாக்கி உ.பி தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே பாசிச பாஜக-வின் உடனடி நோக்கமாக உள்ளது.

உ.பி : பள்ளி மாணவர்கள் இந்து மதவெறி உறுதிமொழி !

நன்றி வினவு செய்திகள்


மக்கள் அதிகம் வாசித்தவை:

 • இயேசு கிறிஸ்துவினால் ஓய்வு நாளில் குணமாக்கப் பட்டவர்கள்
 • விவசாயிகளை பாதுகாக்க பொங்கல் திருநாளில் உறுதி ஏற்போம் என உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய...
 • சாத்தான்குளம் வழக்கில் பைபிளை மேற்கோள்காட்டிய நீதிபதிகள்
 • உயர்ந்த ஹோட்டலின் ஊசிப்போன பலகாரம்! ....வித்யா'வின் பதிவு!
 • இதற்கு பெயர் தான் கௌதாரியோ!
 • சிலுவை பரலோகத்தை இணைக்கும் ஓர் பாலம்
 • கிறிஸ்தவ மத போதகரை அறையில் வைத்து பூட்டிய ஸ்ரீராம் சேனா: கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாக வழக்குப்பத...
 • வேதாகமத்தை வாசிப்பதின்மேலுள்ள ஆர்வமின்மையை மேற்கொள்வது எப்படி?
 • கர்த்தர் நம்மை சோதிக்கிறார் என்று சொல்லலாமா?
 • ஆட்டுத்தோல் !

 • Share this page with friends

  Warning: array_key_exists(): The first argument should be either a string or an integer in /var/www/wp-content/mu-plugins/gd-system-plugin/includes/class-cache.php on line 637

  Warning: array_key_exists(): The first argument should be either a string or an integer in /var/www/wp-content/mu-plugins/gd-system-plugin/includes/class-cache.php on line 662