அமெரிக்கா: தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – சமய போதகர் மரணம், சிலர் காயம்

Share this page with friends

4/1/2021 11:25

அமெரிக்காவின் டெக்ஸஸ் (Texas) மாநிலத்தில் நேற்றுக் காலை, தேவாலயம் ஒன்றில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக KLTV செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது.

வினோனா (Winona) நகரிலுள்ள ஸ்டார்வில் மெதடிஸ்ட் (Starrville Methodist) தேவாலயத்தில் இடம்பெற்ற அந்தச் சம்பவத்தில், ஒருவர் மாண்டதோடு சிலர் காயமுற்றனர்.

அந்தச் சம்பவத்தின் தொடர்பில், சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாக டெக்ஸஸ் ஆளுநர் கிரெக் அபோட் (Greg Abbott) தெரிவித்தார்.

யாரோ ஒருவர் கழிப்பறையில் மறைந்திருப்பதைக் கண்ட தேவாலய போதகர், தமது துப்பாக்கியை வெளியே எடுத்தார் எனக் கூறப்பட்டது. அந்தத் துப்பாக்கியைப் பிடுங்கிய சந்தேகநபர், போதகரைச் சுட்டதாக KLTV நிறுவனம் குறிப்பிட்டது.

நேற்று முன் தினம் அந்த ஆடவர், இன்னொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் நம்பப்படுகிறது. காவல்துறையினர், அவரை அதிவேகத்தில் துரத்திச் சென்று சுட்டுக் காயப்படுத்திப் பிடித்தனர்.  

Thank you: Seithi Media Corp


Share this page with friends