அமெரிக்கா: துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை சுட்டுக் கொன்றது போலீஸ்

Share this page with friends

அமெரிக்காவில் உள்ள தேவாலய வளாகத்தில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

நியூயார்க்:


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரபல தேவாலய வளாகத்தில் நேற்று கிறிஸ்துமஸ் இசைக் கச்சேரி நடந்தது. கச்சேரி முடிந்து பொதுமக்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், தேவாலய வாசல் பகுதியில் நின்றபடி, திடீரென வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் அங்கு திடீர் பரபரப்பும் பதற்றமும் உருவானது. 
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அந்த நபரை சுற்றி வளைத்து, அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அந்த நபரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறிது நேரத்தில் அந்த நபர் இறந்துவிட்டார். 
துப்பாக்கி சூடு நடத்திய நபருக்கு 50 வயது இருக்கும். அவர் பயன்படுத்திய சிறிய துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சரியான நேரத்தில் போலீசார் செயல்பட்டதால், மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்ற போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு தெரிவித்தார்.

நன்றி: மாலைமலர் (டிசம்பர் 14, 2020)


Share this page with friends