தமிழில் முதல் முறையாக ஒருங்கிணைந்த பல்நோக்கு மின்செயலி வேதாகமம்.

Share this page with friends

Vedham (வேதம்) – Multi Purpose Tamil Bible

தமிழில் முதல் முறையாக ஒருங்கிணைந்த பல்நோக்கு மின்செயலி வேதாகமம்.

தமிழில் முதல் முறையாக ஒருங்கிணைந்த பல்நோக்கு மின்செயலி வேதாகமத்தை சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அமைந்துள்ள ஜெபத்தோட்டத்தில் தந்தை S.J. பெர்க்மான்ஸ் அவர்கள்   09, அக்டோபர் 2021 அன்று பிற்பகல் 12.30 மணியளவில் ஜெபித்து வெளியிட்டுள்ளார்.

“வேதம்” என பெயரிடப்பட்டிருக்கும் இந்த மின்செயலி வேதபிரியர்களால் வேதபிரியர்களுக்கு வழங்கப்படும் அன்பு பரிசு ஆகும்.

நவீன உலகில் நமக்கு கிடைக்கும் மிக சிறிய நேரத்திலும் வேதத்தோடு இணைந்திருக்க ஒரு அற்புதமான வாய்ப்பு.

பல்நோக்கு வேதாகமம்:

 • தமிழ் ஆங்கில வேதாகம ஒப்பீடு
 • கடின வார்த்தைகளுக்கான அகராதி
 • ஆங்கில எழுத்துருவில் தமிழ் வேதாகமம்
 • அதிநவீன குறிப்பேடு & பகிர்வு வசதி
 • வசனம் & குறிப்பேடு பதிவிறக்க வசதி

அன்றாட பயன்பாடு:

 • இன்றைய வாக்குதத்த வசனம்
 • விரைவாக வசன தேடுதல் முறை
 • வேதாகம வேத வினா – விடை
 • வேதாகம வால்பேப்பர் & எடிட்டர்
 • ஆயிரம் ஸ்தோத்திர பலிகள்

வேதாகம பொக்கிஷங்கள்:

 • வேதாகம மனிதர்கள் & மின் அகராதி
 • வேதாகம ஆய்வுகள் & அளவீடுகள்
 • வேதாகம உபதேசங்கள் & சாதனைகள்
 • வேதாகம துணுக்குள் & வரலாறுகள்

திரை & அமைப்புகள்:

 • கண்களை பாதுகாக்கும் திரை வசதி
 • பாதுகாப்பானது & பயன்படுத்த எளிமையானது
 • விருப்பத்திற்கேற்ற எழுத்து அளவுகள்
 • முற்றிலும் லாப நோக்கமற்றது

ஆடியோ பைபிள் (தமிழ் & ஆங்கிலம்)

வேதத்தை வாசிப்பது மட்டுமல்ல, வேதத்தை கேட்பதும் எளிமையாக்கப்பட்டிருக்கிறது . தமிழ் மற்றும் ஆங்கில வேதாகமங்களில் விரும்பும் மொழியினை தேர்வு செய்து எந்த வேலை செய்துகொண்டிருந்தாலும் வேதம் உங்கள் காதுகளில் ஒலிப்பதை உறுதிப்படுத்தும் வசதி.

அதிநவீன தொழில் நுட்ப வசதிகள்

மொபைல், கம்ப்யூட்டர், டிவி உள்ளிட்ட அனைத்து மின்னணு சாதனங்களிலும் பயன்படுத்தும் வசதியுடன்,  நமது திருச்சபைகளில் தேவச்செய்தியின் போது வசனங்களை எந்த திரையிலும் விரைவில் காண்பிக்கும் வசதி உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேரலையின் போது வசனத்தினை திரைக்கு ஏற்றார்போல் பயன்படுத்தும் வசதி  கொடுக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.

உலக சாதனை: (World Record)

உலகில் முதல் முறையாக தமிழ் வேதாகமத்தை ஆங்கில எழுத்துருவில் (தங்கிலீஸ்) முழு வேதாகமமும் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வேதாகமத்தை தமிழில் வாசிக்க தடுமாறுகிறவர்களுக்கு இது ஒரு அரிய பொக்கிஷம். இது உலக சாதனை விருதுக்காக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இவை அனைத்தையும் இனி ஒரே தளத்தில் வாசிக்கவும், நாம் பயன்படுத்தவும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

இதை பதிவிறக்கம் செய்யுங்கள்:

மேலதிக விபரங்களுக்கு:

Cell: +91-9940-440-443 | Email: tcs@apamission.org

Website: OnlineBibles.org | ChristianSongbook.org


Share this page with friends