• Sunday 9 March, 2025 05:21 PM
  • Advertize
  • Aarudhal FM
விழித்திடு சபையே விழித்தெழு!

விழித்திடு சபையே விழித்தெழு!

  • by டி.ஜி.வி.பி.சேகர்
  • Kanyakumari
  • 20250209
  • 0
  • 142

விழித்திடு சபையே விழித்தெழு!

தேவாலயத்தில் ஆராதனையில் பாலரைத் தேடுகிறேன் காணவில்லை!

அந்தநாள் குழந்தைகள் இல்லாத தொழுகை கண்டதில்லை இன்றோ முதியோருக்காய் ஆராதனைகள்!

இறையருளால் பெற்ற மகவு இன்நாளில் ஆண்டவனைவிட்டு
தூரமாய்!

ஆராதனை ஒழுங்றியாமல் பிள்ளையை வளர்த்தால் நாளை ஆலய கூடுகை அழிந்துபோகும்!

திரும்பிப் பாருங்கள் பெற்றவரே ஏதும் புரியாவிட்டால் தாத்தா பாட்டியை கேழுங்கள்!

வீட்டின் செல்வங்கள் ஆலயம் செல்வது கட்டாயம் பாலருக்கென தனியிடம்!

பாலர் பாடலுண்டு ஜெபம் கதையென்று தனியாய் ஓர் ஒழுங்கு கண்ணிக்க மூப்பர்!

முழங்காலிட வேண்டும் வாய்திறந்து பாடவேண்டும் வசனத்தை சத்தமாய் வாசித்தல் முக்கியம்!

ஆராதனைக்கே முதலிடம் அதில் கற்கும் ஞானப்பாட்டு கீர்த்தனையே வாழ்வில் நிரந்தரம்!

ஆலய ஆராதனை நடைமுறைகளைக் கல்லாது எதைக் கற்றும் பயனில்லை அவை கானல் நீரே!

ஓய்வுநாள் பாடசாலை தேவை ஆராதனையில் கலந்து கொள்ளாமல் வெறும் ஓய்வுநாள் பள்ளிப்படிப்பு உதவிடுமா?

ஆராதனை வேளையிலே மறு பக்கம் ஓய்வுநாள் வகுப்பு பிள்ளைகளை கூட்டிச் செல்ல படியெங்கும் கூடி திண்ணைப் பேச்சு!

குழந்தைகளை ஆலயம் அழைத்து வருதல் பெற்றோரின் கடமை பரிசுத்த ஓய்வுநாளை பரிசுத்த குலைச்சலாககின் மடமை!

பலகாலமாய் சொல்ல நினைத்து சொல்லாமல் இருந்ததை சொல் என்றது ஓர் அழகு குழந்தை!

கஸ்பாசபையின் இருநூற்றி ஆறாவது ஆண்டு நிறைவு நாள்
ஆராதனையில் பாடல்குழுவோடு அங்கத்தினர் பாட!

ஏடறியா எழுத்தறியா பாட்டறியா பொருளறியா சின்னஞ்சிறிய பிஞ்சிக் குழந்தையொன்று!

ஞானப்பாட்டு கீர்த்தனை புத்தகத்தை தலைகீழாய் திறந்து வைத்து ஏதோ பாடியது கண்டிப்பாய் இறைவன் கேட்டிருப்பார்!

அத்தனை சபை அங்கத்தினரும் குழந்தைகளை ஆராதனைக்கு அழைத்து வந்தால் தவளலாய் தத்தி நடத்தலாய் கற்கும் யாவும்!

பிள்ளைகளை ஆலய ஆராதனைக்கு அழைத்துவரத் தவறினால் சிறுவர் சிறுமியரின் ஆன்மீக அறிவை பறிக்கும் அநீதியை செய்கிறோம்!

போதகர்கள் மூப்பர்கள் பெற்றோர் இதை உணரின் எதிர்காலம் அன்பால் கட்டப்படும்!

வாழ்த்துக்களுடன்

டி.ஜி.வி.பி.சேகர்
முன்னாள் நிர்வாகக்குழு உறுப்பினர்
கன்னியாகுமரி சி.எஸ்.ஐ.பேராயம்

Summary

Wake up church Wake up