மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்கள்
மார்க்கந்தப்பி அலையும் நடசத்திரங்களாய் இருக்கிறார்கள். இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. யூதா : 1 : 13.
வேதத்தில் ஊழியர்களுக்கென்று விசேஷித்த கிருபைக்கொடுக்கப்பட்டுள்ளது. நாம் எங்கே இருக்கிறோம் தெரியுமா ? தேவனது வலதுகரத்தில் நட்சத்திரமாக இருக்கிறோம்.
வெளி : 1 : 20. இப்படி தேவனது வலதுகரத்தில் இருக்கும் நாம் எதற்காக மார்க்கம் நம்பவேண்டும் என்பது தான் யூதாவின் கேள்வி.
வேதத்தில் மார்க்கந்தப்பியவர்கள் யார் யார் என்றும் எதற்காக மார்க்கம் தப்பினார்கள் என்பதை இந்த சத்தியத்தில் பார்க்கலாம். வாருங்கள். சத்தியத்திற்குள் போகலாம்.
1. மக்களை பிரியப்படுத்துவதற்காக மார்க்கந்தப்பின ஆரோன்.
(யாத் : 32 : 1 — 4 , 24, எபி 5 : 4)
2. ஒரு பெண்ணின் பயமுறுத்தூம் சொல்லுக் அஞ்சி மார்க்கநதப்பின
எலியா. (1 இராஜா : 19 : 4)
3. பண ஆசையினால் மார்க்கந்தப்பின கேயாசி (2 இராஜா : 5 : 20)
4. மாமிச இச்சையால் தன் அபிஷேகத்தை இழந்து தவித்த
மார்க்கந்தப்பிய சிம்சோன். (நியா : 16 : 16 , 17)
5. தம் துணிகரத்தினாலும் கீழ்படியாமையாலும் தேவ மகிமையை விட்டு தம் சொந்த மகிமைக்காக மார்க்கந்தப்பின யோனா.
(யோனா : 1 : 1 : 4 : 1)
மேல் சொன்ன தேவ ஊழியர்கள் பலமான கரத்தரது அழைப்பை
பெற்றும் தேவ வல்லமையைப் பெற்றும் அவர்கள் மார்கந்தப்பும் நட்சத்தினங்களாக காணப்பட்டார்கள். ஒவ்வொருவரும் தமது சுயநல்த்தாலும் தேவனுக்கு பயப்படாமலும் அற்ப காரியத்திற்காக மார்கந்தப்பினார்கள். அவர்கள் நம்மையும் தம்முடைய
அழைப்பையும் மறந்தார்கள். அவர்களது ஊழியம் காரிருளானது.
தேவனது வலதுகரத்தில் இருக்கும் பாக்கியம் வேறு யாருக்
கும் கிடையாது. அது ஊழியர்களுக்கு மாத்திரம் தான் அந்த
இடம் சொந்தம். அவர்கள் அந்த இடத்தையும் இழந்து காரிருள்
அவர்களை சூழ்ந்துள்ள கொண்டது. இது ஊழியர்களாய்
இருக்கிற நமக்கு இது ஒரு எச்சரிப்பு. வேதம் சொல்கிறது
யோவா : 12 : 26 நான் எங்கே இருக்கிறானோ அங்கே என் ஊழியக்காரர்கள் இருப்பார்கள் என்று ஊழியர்களை குறித்து மேன்மைப்படுத்துகிறது வேதம். அற்ப அநித்தியமான சந்தோஷத்திற்காக காரிருளை தேடிக்கொண்டோம். ஊழியம்
தேவமகிமைக்காக செய்வதுதான் ஊழியம். நாம் மார்க்கத்திற்கு
மேன்மையாய் காணப்படுவோம்.
நமது ஊழியத்தில் தேவன் மகிமைபடட்டும். ஆவியின் அநுக்கிரகம்
உங்களது ஊழியத்தில் காணப்பட்டும். ஆமென்
S. Daniel Balu, Tirupur.