- 116
- 20250223
- by KIRUBAN JOSHUA
- 7 months ago
- 0
உலகம் எதை நோக்கிப் போகிறது என்றே தெரியவில்லை. 13 வயது சிறுவன் ஒருவன், 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் ஆந்திராவில் அடிகொப்பகா என்ற இடத்தில் நடந்துள்ளது. வீட்டுக்கு அருகில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது, இந்த கொடுமையை செய்திருக்கிறான். அம்மாவின் போனில் ஆபாச வீடியோ பார்த்துவிட்டு, இந்த குற்றத்தை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பெற்றோரே கவனிங்க.
சிறுவயதில் இப்படிப்பட்ட தவறான எண்ணங்களில் சிக்கி, வழி விலகி செல்லும் சிறுவர்களுக்காக ஜெபிப்போம். சிறுவர்களை வளர்க்க வேண்டிய விதத்தில் வளர்த்து, கற்றுக் கொடுக்க வேண்டிய விதத்தில் கற்றுக் கொடுத்து நல்வழிப்படுத்த வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின், ஆசிரியரின் கடமை. மேலும் சிறு பிள்ளைகளின் பரிசுத்தத்திற்காக பாதுகாப்பிற்காக பாரத்தோடு ஜெபிப்போம்.
இந்த உள்ளடக்கம் சமூகவலைதளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களிலிருந்து பகிரப்பட்டுள்ளது.