2020 இல் கீழ் காணும் எத்தனையோ பிரச்சனைகளை நாம் சந்தித்து இருக்கலாம்.

Share this page with friends

கர்த்தர் மேல் உள்ள நம்பிக்கையில் வளருங்கள்

2020 இல் கீழ் காணும் எத்தனையோ பிரச்சனைகளை நாம் சந்தித்து இருக்கலாம். உறவினர்களில் நெருங்கியவர்களில், யாரையாவது இழந்து தவித்து இருக்கலாம். மருத்துவமனைகளில் சிக்கி தவித்து இருக்கலாம். நன்மை பெற்றவர்களே நம்மை அம்போ வென்று விட்டு விட்டு நம்மை அருவருப்பாக பார்த்து இருக்கலாம். அநேகருக்கு நாம் அற்பமாக கூட தெரிந்து இருக்கலாம். அங்கீகாரம் இன்றி தவித்து இருக்கலாம். மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியின் மூலம் வாழ்வை நொந்து கொண்டு கூட இருக்கலாம். கடனாளிகள் கூட வசைபாடி இருக்கலாம். நடக்கும் என்று நினைத்தது கூட நடக்காமல் காலதாமதம் ஆகி இருக்கலாம். நம்பினோர் கூட மறந்து இருக்கலாம். உறவினர் நண்பர்கள் கூட தூரத்தில் இருந்து இருக்கலாம். பாவபோராட்டம் மற்றும் பாவத்தில் விழுந்து கூட நொந்து நொந்து வாழ்ந்து இருக்கலாம். என்ன வாழ்க்கை என்று கூட சலித்து இருக்கலாம். பிறர் ஏன் சொந்தங்கள் கூட நம்மை காட்டி கொடுத்து இருக்கலாம், நம்மை விட்டு போயிருக்கலாம். மந்திரம், பிசாசின் தந்திரம் மற்றும் அதிகார நெருக்கடியில் சிக்கி அநியாயம் கூட சந்தித்து இருக்கலாம். வஞ்சனை சூது, ஏமாற்றம், இழப்பு, நஸ்டம் என்று எத்தனையோ சூழலில் போய் இருந்து இருக்கலாம்!

ஆனாலும்

A. இன்றும் உயிரோடு இருக்கிறோமே அதற்காக கர்த்தரை மகிமை படுத்துங்கள். இந்த சூழலில் நாம் மொத்தத்தில் அழிந்து விழுந்து போகாமல் நிற்கிறோம் என்றால் அது அவருடைய கிருபையே! எனவே அவர் இப்படிபட்ட சூழலிலும் நமக்கு செய்த நன்மைகள் உபகாரங்கள் அவைகளை நினைத்து அவரை மகிமைபடுத்துங்கள்.

B. இப்படிபட்ட நெருக்கடியில் கூட ஒருவர் செய்த ஒரு சிறிய உதவி, ஒருவர் தூதனை போன்று வந்து உங்கள் பக்கத்தில் நின்று உங்களுக்கு பக்கபலமாக நின்ற அந்த நபர், அந்த போதகர், ஏன் அந்த சபையாக கூட இருக்கலாமே, அவர்களை நினைத்து பாருங்கள், அவர்களும் எத்தனையோ பாடுகளின் மத்தியில் உங்களுக்கு துணை செய்தார்களே! அதற்கு கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள். அவர்களிடம் நன்றி மற்றும் பரிவு உண்மையாக காட்டுங்கள். இவர்கள் தான் உங்கள் காயத்தை ஆற்றுன உண்மையான பிறன். இந்த பிறனை நேசியுங்கள்.

C. நிலையற்ற உலகில் வாழும் நாம் நிலையுள்ளவைகளை இனியாவது தேடி செல்வோம், மனித நிலைகள் இப்படி தான்! அவரவர் வாழ்வில் வரும் பொது தான் அவரவருக்கு அனுபவம் வரும் எனவே நாம் நல்ல சீடனாக மாற முயர்ச்சிப்போம். ஒருபோதும் மனிதனை சார்ந்து, நம்பி, எதிர்பார்த்து செயல்படாதபடி பாருங்கள். அழைத்தவர் உண்மை உள்ளவர் எனவே அவரை எப்போதும் நோக்கி பாருங்கள். அவரை நோக்கியே ஓடுங்கள்.பாவிகளால் விபரீதங்களை சகித்து சிங்காசனத்தில் வீற்று இருக்கிறார்.

D. இன்னும் இப்படிபட்ட சூழ்நிலைகள் பெருகி வரும் காலகட்டத்தில் நாம் கடந்து போக வேண்டி இருப்பதால், அதிக கிருபைகளை கேட்டு பெற்று கொள்ளுங்கள், ஞானத்தை பெற்று கொள்ளுங்கள், அபிசேகத்தை பெற்று கொள்ளுங்கள், நெருக்கடியில் வாழ கற்றுக்கொள்ளுங்கள், மனிதனை நொந்து கொள்ளாமல், சூழலை நொந்து கொள்ளாமல், எழும்பி ஓடுங்கள், ஏனெனில் போக வேண்டிய தூரம் வெகு தூரம். எனவே சலிப்பை தூக்கி எறியுங்கள், சோர்வை மாற்றி கொள்ளுங்கள். துதியின் ஆடையை உடுத்தி கொள்ளுங்கள். முறுமுருப்பை மாற்றி போடுங்கள். யாரையும் குற்றம் சாட்டி கொண்டே இருக்காதீர்கள், நடக்க வேண்டியதை பாருங்கள், இதுவும் கடந்து போகும், ஏனெனில் நாம் காண்கிற மனிதனும் அப்படியே தான் இருக்கிறான். அவனும் ஒரு நாள் மாண்டு தான் போவான்! ஆனால் நாம் நன்மையை விதைத்தால் நிச்சயம் மேன்மையை அறுவடை செய்வோம். அவணவனின் கிரியைகளுக்கு ஏற்ற பிரதிபலன் கொடுக்க அவர் சீக்கிரம் வருகிறார்.

யாராவது வந்து தூக்கி விடுவார்கள் என்று காத்திருக்க வேண்டாம், கர்த்தர் தந்த கையை ஊன்றி எழும்புங்கள், காலுன்றி நில்லுங்கள், கர்த்தர் தந்த நல்ல உள்ளங்களோடு சேர்ந்து நில்லுங்கள், அவர் சித்தம் செய்ய விட்டு கொடுங்கள், அவரோடு நேரத்தை செலவிடுங்கள், அவரை போல மாறுங்கள், ஆத்துமா ஆதாயம் செய்யுங்கள், எந்த மனிதனையும் அற்பமாக என்னாதிருங்கள், நெருக்கடியில் உள்ளவர்களோடு, சிருமைபட்டவர்களோடு சேர்ந்து நில்லுங்கள், உங்கள் சபையை உங்கள் ஆவிக்குரிய போதகர் அவர் குடும்பத்தை அற்பமாக எண்ணாதிருங்கள் ஏனெனில் அவர்கள் நீங்கள் கடந்து செல்லும் எல்லா சூழலிலும் உங்களை எல்லாம் தாங்கி பிடித்து கொண்டு ஒரு ஓரத்தில் ஒதுங்கி நிற்பவர்கள்.

அவர் வருகிறார், பூமியை நிதானத்தோடும் நியாயத்தோடும் நியாயம் தீர்க்க வருகிறார். எனவே அவரை பற்றும் நம்பிக்கையில் வழருவோம். கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

செலின்.

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends