நாம் சுவிசேஷம் பிரசங்கிக்கவேண்டும்

Share this page with friends

பிரசங்க குறிப்பு

அங்கே சுவிசேஷத்தை பிரசங்கம் பண்ணினார்கள். அப் : 14 : 7 அப்போஸ்தலர்களுடைய பிரசங்கத்தால் பூமி அசைந்தது. ஜனங்கள் மத்தியிலும் அசைவை ஏற்படுத்தியது. அப்படி அவர்கள் என்னென்ன பிரசங்கித்தார்கள் என்பதை நாம் இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம். நாம் பிரசங்கிக்க வேண்டிய முக்கியமானவைகள் எவைகள் என்பதை சிந்திக்கலாம். வீண் கட்டுக்கதைகளை பிரசங்கம் செய்யாமல் சுவிசேஷத்தை பிரசங்கம் செய்ய வேண்டும். பிரசங்கம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்தக் குறிப்பை சிந்திக்கலாம்.

 1. இயேசுவைக் குறித்து பிரசங்கிக்கவேண்டும் – அப் : 8 : 5 , 35
 2. இயேசுவே கிறிஸ்து என்று பிரசங்கிக்க வேண்டும் – அப் : 5 : 42
 3. கிறிஸ்து தேவனது குமாரன் என்று பிரசங்கிக்க வேண்டும் அப் : 9 : 20 , மத் : 3 : 17 , 17 : 5, 1 யோவா : 4 : 15
 4. சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை பிரசங்கிக்க வேண்டும் – 1 கொரி : 1 : 23
 5. இயேசுவையும் உயிர்தெழுதலையும் குறித்து பிரசங்கிக்க வேண்டும் – அப் : 17 : 18 , 32
 6. மனந்திரும்புதலைக் குறித்து பிரசங்கிக்க வேண்டும். மத் : 3 : 2 , 4 : 17, 10 : 7
  மாற்கு : 6 : 12
  லூக்கா : 13 : 3 , 5
 7. தேவனுடைய இராஜ்ஜியத்தைக் குறித்து பிரசங்கிக்க வேண்டும்.
  லூக் : 9 : 60
  மாற்கு : 1 : 14
  அப் : 19 : 8, 20:25,28:31
  ரோமர் : 14 : 17
  1 கொரி : 6 : 9 , 10

நாம் என்னென்ன பிரசங்கிக்க வேண்டும் என்பதைக் குறித்து பார்த்தோம். நாம் சுவிசேஷத்தை பிரசங்கிக்க வேண்டும். பிரசங்கிமார்களே மேல் சொல்லப்பட்ட வைகைக் குறித்து பிரசங்கித்தீர்களா, ஜனங்களுக்கு இயேசுவைக் குறித்து அதிகமாக பிரசங்கிக்க வேண்டும். இயேசுவைக் குறித்துள்ள வெளிப் பாடுகளை பிரசங்கிக்க வேண்டும். ஜனங்களை சுவிசேஷத்தின் ஆழங்களுக்கு கொண்டு போங்கள். நாம் பிரசங்கிக்க வேண்டிய இன்னும் அநேக காரியங்கள் உண்டு. ஆனாலும் இவைகள் பிரதானமானவைகள். பிரசங்கியாரே சபையில் சுவிசேஷத்தையும், அப்போஸ்தலர் உபதேசங்களையும் பதித்து வையுங்கள் அப்போது உங்கள் சபை
ஆசீர்வதிக்கப்படும்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur


Share this page with friends