இந்தியா வேண்டும்.!இந்தியா வேண்டும்.!!

இந்தியா வேண்டும் இந்தியா வேண்டும்.! நாங்கள் தொலைத்த எங்கள் இந்தியா வேண்டும்..!
அன்பு உள்ள இந்தியா வேண்டும்.
ஐக்கியம் உள்ள இந்தியா வேண்டும் .
சாதி இல்லாத இந்தியா வேண்டும்.
மதம் இல்லாத இந்தியா வேண்டும்.
சமத்துவம் உள்ள இந்தியா வேண்டும்.
சண்டை இல்லாத இந்தியா வேண்டும்.
சகிப்புத்தன்மை உள்ள இந்தியா வேண்டும்.
இலவச மருத்துவமுள்ள இந்தியா வேண்டும்.
விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் இந்தியா வேண்டும்.
விவசாயிகளை மதிக்கும் இந்தியா வேண்டும்.
தண்ணீர் வசதிகள் உள்ள இந்தியா வேண்டும்.
நல்ல ரோடு வசதி உள்ள இந்தியா வேண்டும்.
மனிதத்தை மதிக்கும் இந்தியா வேண்டும்.
கொலைகாரர்கள் இல்லாத இந்தியா வேண்டும்.
கொள்ளைக்காரர்கள் இல்லாத இந்தியா வேண்டும்.
கடத்தல்காரர்கள் இல்லாத இந்தியா வேண்டும்.
லஞ்சம் இல்லாத இந்தியா வேண்டும்.
கொடுமைகள் இல்லாத இந்தியா வேண்டும்.
மதுபானம் இல்லாத இந்தியா வேண்டும்.
விபச்சாரம் இல்லாத இந்தியா வேண்டும்.
திருடர்கள் இல்லாத இந்தியா வேண்டும்.
குற்றவாளிகள் இல்லாத இந்தியா வேண்டும்.
பஞ்சம் இல்லாத இந்தியா வேண்டும்.
வறட்சி இல்லாத இந்தியா வேண்டும்.
பிச்சைகாரர்கள் இல்லாத இந்தியா வேண்டும்.
ஏழைகள் இல்லாத இந்தியா வேண்டும்.
ஊழல் இல்லாத இந்தியா வேண்டும்.
நேர்மையான அதிகாரிகள் உள்ள இந்தியா வேண்டும்.
நதி நீர் இணைப்பு உள்ள இந்தியா வேண்டும்.
நீதியுள்ள நீதிமன்றம் உள்ள இந்தியா வேண்டும்.
அனைவருக்கும் வேலைவாய்ப்பு தரும் இந்தியா வேண்டும்.
கடன் இல்லாத இந்தியா வேண்டும்.
மனித நேயத்தை போற்றும் இந்தியா வேண்டும்.
மொத்தத்தில் என் இந்தியாவை போன்ற ஒரு தேசம் இல்லை என்று சொல்லக்கூடிய இந்தியா வேண்டும்.
நாங்கள் தொலைத்த எங்கள் இந்தியா வேண்டும்.
இந்தியா வேண்டும் இந்தியா வேண்டும்.!
S.David Livingstone