தீர்மானம் எடுக்கும் முன் நாம் கேட்க வேண்டிய கேள்விகள்?
1) இந்த தீர்மானம் நான் இன்றே எடுக்க வேண்டுமா? (நாளை நிதானித்து கூறுகிறேன். ஒரு வாரம் சிந்திக்க நேரம் கொடுங்கள் என சிந்திந்து முடிவெடுக்க வேண்டும்)
2) தீர்மானம் எடுக்கும் தகுந்த மனநிலையில் நான் இருக்கிறேனா? (மிகுந்த சந்தோஷத்தில் அல்லது மிகுந்த துக்கத்தில் எடுக்கும் தீர்மானங்கள் ஆபத்தை விளைவிக்கும்)
3) எனது தீர்மானத்தில் பிறருடைய நிர்பந்தம் / அழுத்தம் இருக்கின்றதா?
4) இந்த தீர்மானம் என் வாழ்க்கை தொடர்பானதா? அல்லது பிறர் தொடர்பானதா?
5) இந்த தீர்மானம் மனசாட்சிக்கு பிரியமானதா? அல்லது பிறருக்கு எதிரானதா?
6) இந்த தீர்மானத்தின் விளைவு எப்படி இருக்கும்?
7) கடந்த காலங்களில் இந்த பிரட்சனைகளுக்கு நான் எப்படி தீர்மானம் எடுத்திருக்கிறேன்?
8) இந்த தீர்மானத்திற்கு பிறருடைய ஆலோசனை தேவையா?
9) இந்த தீர்மானம் குறித்து வேதம் என்ன கூறுகிறது?
10) இந்த தீர்மானம் குறித்து எனது மனசாட்சி என்ன நினைக்கிறது? இந்த தீர்மானம் தொடர்பாக மனதில் சமாதானத்தை உணருகிறேனா?
11) இந்த தீர்மானத்தில் எனக்கு மட்டுமல்ல, என் நலனில் அக்கறை உள்ளவர்களும் சமாதானத்தை உணருகிறார்களா?
12) இந்த தீர்மானம் பக்திவிருத்திக்கேதுவானதா? இந்த தீர்மானத்திற்கு தேவன் சம்மதம் தெரிவிப்பாரா?
– பாஸ்டர். பெவிஸ்டன்தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க்