புதிய ஏற்பாட்டு நடைமுறையை அமல் படுத்துவோம்

Share this page with friends

தீர்க்கதரிசன ஊழியர்கள், புதிய வருட வாக்குத்தத்தம் இந்த வருடம் விமர்சிக்கப்பட்டது போல எந்த வருடமும் விமர்சிக்கப்பட்டதாக தெரியவில்லை. கிருபை என்ற தவறான உபதேசம் ஏற்படுத்திய எதிர்வினை, கிருபை என்ற பதப் பயன்பாட்டையே சபைகளில் குறைத்து விட்டது. ஒரு சிலரின் தவறால் கிறிஸ்தவ நம்பிக்கையின் நுழைவுவாசலான கிருபை பதம் damage பண்ணப்படலாமா? அதுபோல நிறைவேறாத தீர்க்கதரிசனம் சொன்ன சிலரால் தீர்க்கதரிசனம் அற்பமாக எண்ணப்படும் நிலை ஏற்பட்டு விட அனுமதிக்க கூடாதல்லவா? பெந்தேகோஸ்தே சபைகள் வளர்ந்ததற்கு ஒரு முக்கிய காரணம், ஆராதனை வேளையில் கிரியை செய்த வரங்கள் தானே? குறிப்பாக தீர்க்க தரிசனம் உரைக்கப்பட்டு பாவிகள் திரளாக மனந்திரும்பினார்களே.. என்றைக்கு ஆராதனை முழுவதும் பாடலாக மாறினதோ வரங்கள் செயல்படுவதும் குறைய ஆரம்பித்துவிட்டது. இதில் கடந்த வருடம் நிறைவேறாத தீர்க்கதரிசனங்கள் பரியாசம் பண்ணப்பட்ட தால், ...புதிய வருட ஆராதனைகளில் சபைக்குள் கொடுக்கப்படும் செய்தியில் தீர்க்க தரிசனங்களும், வாக்குத்தத்தங்களும் பலவீனப்படலாகுமோ? நாளை எப்படியிருக்கும்? நாடு என்ன ஆகும் என்று சொல்வதுதான் தீர்க்கதரிசனம் என்ற அறியாமை இந்த வருடத்தோடு ( 2020) ஒழியட்டும். ஆண்டவரே என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் ? என்று கேட்கும் ஒரு விசுவாசிக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லும் தீர்க்கதரிசனங்களும், அதை நிறைவேற்ற பெலன் தரவே வாக்குத்தத்தம் என்ற புதிய ஏற்பாட்டு நடைமுறையை அமல் படுத்துவோம். இரவில் நடத்தினாலும் , பகலில் நடத்தினாலும் 2021 புதிய வருட ஆராதனை அனைத்து சபைகளிலும் எழுச்சியுடன் நடைபெற தேவன் தாமே உதவுவாராக. ஆமென்...

கலை தேவ தாசன்.


Share this page with friends