செழிப்பின் உபதேசத்தாரின் குணங்கள் என்ன?

Share this page with friends

செழிப்பின் உபதேசமும் அதனால் தேயும் கிறிஸ்தவ சத்தியமும்….

செழிப்பின் உபதேசத்தாரின் குணங்கள் என்ன?

1.சுவிசேஷம் அறிவிக்கமாட்டார்கள்.
2.சுவிஷேச கூட்டம் நடத்தமாட்டார்கள்.
3.ஆத்தும ஆதாயம் செய்யமாட்டார்கள்.
4.பரிசுத்தம் பற்றி பேசமாட்டார்கள்.
5.சுத்திகரிப்பை பற்றி பேசுவதில்லை.
6.அர்ப்பணிப்பு பற்றி பேசமாட்டார்கள்.
7 இயேசு கிறிஸ்து வின் வருகையை குறித்து பேசமாட்டார்கள்.
8.விசுவாசிகளின் பாடுகளில் பங்கு கொள்ள மாட்டார்கள்.
9.சமூக உதவிகள் செய்வது இல்லை.
10.வஞ்சக வீரிய பேச்சால் மற்ற சபைக்கு போகிறவர்களை தங்கள் பக்கம் இழுத்து அவர்கள் நன்மைகளை பறிப்பார்கள்.
11.பிரசங்க மேடையை நாடக மேடையாக்குவார்கள்.
12.வேதத்தை படிக்காமல் அதை கைகொள்ளாமல் வெளி நாட்டு புத்தகங்களை வாங்கி அதை படித்து அதை கொஞ்சம் வரையறை செய்து பிரசங்கிப்பார்கள்.
13.வியாதிகள் வருவதில்லை என்றும்
14.பணகஷ்டம் பாடுகள் வருவதில்லை என்றும் தொடர்ந்து பேசுவார்கள்.
15.மொத்தத்தில் இவர்கள் கூட்டங்களில் தேவ பிரசன்னம் தேவமகிமைக்கு இடம் கொடுக்காமல் மக்களை உணர்ச்சி பூர்வமாக பேசி சத்தியத்திற்காக கீழ்படிய வைக்காமல் அவர்களின் வழிக்கு திருப்பி ரசிகர் கூட்டத்தை உருவாக்குவார்கள்.
16.விளம்பர பிரியர்களாக இருப்பார்கள்.
17.ஆவிக்குரிய தரத்தை விட உலக தரத்தை முக்கியத்துவப்படுத்துவார்கள்.
(கார் மற்றும் ஆடைகள்)
18.வேதத்திலுள்ள பரிசுத்தவான்களையே குற்றப்படுத்துவார்கள்.
19 மிஷனரிகளை தாங்கமாட்டார்கள்.
20.நல்ல நிர்வாகம் செய்வதை போல பாசாங்கு காட்டுவார்கள்.

அப்பப்பா இவ்வளவு இருக்குதா பாஸ்டர்… ஆமங்க இன்னும் நிறைய உண்டு.. அதில் இவர்கள் பயன்படுத்தும் தந்திர பிரசங்கம் ஒன்று மாத்திரம் சொல்ல விரும்புகிறேன். அது என்னவென்றால்.
“நாம் கர்த்தரின் வார்த்தையை அறிக்கை செய்தாலே போதும் அது நம் வாழ்க்கையில் நிறைவேறும்”உடனடியாக மக்களும் அத்தனை வசனங்களையும் அறிக்கை செய்வார்கள்….நண்பர்களே கர்த்தரின் வாக்குத்தத்தங்களை அறிக்கை செய்வதில் தவறு இல்லை அதற்கு நான் எதிரியும் இல்லை காரணம் சாமானியனான நானும் அநேக வாக்குத்தத்தங்களை அறிக்கை செய்து வெற்றி அடைந்திருக்கிறேன்.

ஒரு வாக்குதத்தைஅறிக்கை செய்வதற்கு முன்பு நம்மிடம் இருக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால்…
அபிசேகம்.
பரிசுத்தம்.
கீழ்படிதல்.
அர்ப்பணம்.
தேவ நாமம் மகிமை.

இந்த ஐந்து காரியங்கள் இல்லாமல் நீங்கள் எந்த வசனங்களை அறிக்கை செய்தாலும் எத்தனை ஆயிரம் வசனங்களை அறிக்கை செய்தாலும் உங்கள் வாய் தான் வலிக்குமே தவிர வாக்குத்தத்தம் நிறைவேறாது. இன்னும் இந்த கூட்டத்தார் சொல்லும் மற்றும் ஒரு காரியம் கிருபை… கிருபையானது நீங்கள் எப்படி இருந்தாலும் உங்களை உயர்த்தும் கிருபையானது வாக்குத்தத்தங்களை உங்கள் மேல் பலிக்கச்செய்யும் என்று வசனத்திற்கும் சத்தியத்திற்கும் ஒவ்வாத விசயங்களை பேசி தங்கள் மாய வலையில் சிக்க வைக்கும் தந்திர நரிகள் ஆவார்கள். என்றும் இல்லாத அளவுக்கு இந்த நாட்களில் இந்த செழிப்பின் உபதேசமும் கிருபையின் உபதேசமும் தேசத்தில் பெருகி ஆவிக்குரிய சபைகளை கெடுத்து விட சாத்தானின் தந்திரப்போக்கிற்கு வாய்க்காலாய் அநேக இளம் ஊழியர்கள் மற்றும் இளம் தலைமுறை விசுவாசிகள் வஞ்சிக்கப்பட்ட நிலையில் இருப்பது உள்ளபடியே வேதனை அளிக்கிறது. ஆகவே தேவனாகிய கர்த்தரின் ஊழியக்காரர்கள் தேவ பிள்ளைகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.

David Livingstone


Share this page with friends