வியாதி எதனால் வருகிறது?

1) பாவத்தினால் – சங் 38-3
2) அக்கிரமத்தினால் – சங் 103:3, 107:17
3) கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படியாவிட்டால் – உபா 28:22,35
4) தகுதி இல்லாமல் (பாவத்தோடு) திருவிருந்து எடுத்தால் – 1 கொரி 11:28-30
5) பிசாசினால் – யோபு 2:7
6) இச்சையினால் – 2 சாமு 13:2
7) மனமேட்டிமையினால் – 2 நாளா 26:15-19
8) உலக கவலையினால் = இன்றைக்கு சில வியாதிக்கு டாக்டர் இடம் சென்றால் அவர்கள் சொல்வது கவலையினால் இந்தவியாதி வந்துள்ளது. உங்கள் கவலைகளை கர்த்தர் மேல் வைத்து விடுங்கள் (1 பேது 5:7)
9) Tension மனஅழுத்தம். எந்த சூழ்நிலையிலும் நாம் tension ஆக கூடாது.
10) நாம் சாப்பிடும் சாப்பாடு இன்றைக்கு நாம் சாப்பிடும் சாப்பாடு விஷம் (poison) நிறைந்ததாக காணப்படுகிறது. அதுமட்டுமல்ல நாம் சாப்பிடும் சாப்பாட்டில் கலப்படம் செய்கிறார்கள். அரிசியில் plastic அரிசி கலப்படம் செய்கிறார்கள். இவைகளை சாப்பிட்டால் கண்டிப்பாக வியாதி வரும். ஆகையால் தேவ பிள்ளைகள் தண்ணீர் குடித்தாலும், சாப்பிட்டாலும் ஸ்தோத்திரம் பண்ணி, ஜெபம் செய்து சாப்பிட வேண்டும். அப்போது அது பரிசுத்தமாக்க படுகிறது (1 தீமோ 4:3-5)
11) வருகைக்கு அடையாளம் (பல இடங்களில் கொள்ளை நோய்கள் உண்டாகும் – லூக் 21:11) இன்றைய நாட்களில் கொரோனா, பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல், எலி காய்ச்சல் போன்ற மனிதர்களை கொல்லும் நோய்களை காண்கிறோம்