வேத வசனத்தை என்ன செய்ய வேண்டும்?

Share this page with friends

1) வேதவசனத்தை தினமும் வாசிக்க வேண்டும்

வேலைக்கு செல்கிறவர்கள்/ படிக்கிறவர்கள் தினமும் குறைந்தது 5 அதிகாரம் வாசிக்க வேண்டும். (தினசரி 1 சங்கிதம் 1 நீதிமொழிகள் கண்டிப்பாக வாசிக்க வேண்டும்). இதற்கு 1/2 மணி நேரம்தான் ஆகும். 5 அதிகாரத்தை மொத்தமாக வாசிக்க வேண்டும் என்பது இல்லை. சமயம் கிடைக்கும் போது எல்லாம் வாசிக்கலாம். மற்றவர்கள் (வேலைக்கு செல்லாதவர்கள்) அதிகம் வாசிக்க வேண்டும். வேலைக்கு செல்கிறவர்கள் மதியம் சாப்பாட்டு விட்டு வெட்டி கதை பேசாமல் 10 நிமிடம் கிடைத்தால் அந்த நேரத்தில் 2 அதிகாரம் வாசிக்கலாம். தேவ ஐனமே உனக்கு கிடைக்கும் ஒய்வு நேரத்தில் எல்லாம் வேதத்தை எடுத்து வாசி

வீணரோடு நான் உட்காருவதில்லை (சங் 26:4) என்கிறான் தாவீது. வீணர் வீணாக நேரத்தை போக்குகிறவர்கள். இன்றைய நாட்களில் அநேகர் மற்றவர்களோடு கூடி அரட்டை அடிப்பது, தேவன் தங்களுக்கு கொடுத்த பொன்னான நேரங்களை TV முன்னால் உட்கார்ந்து வீணாக்குவதை காணலாம். பரிசுத்தவான்கள் கையில் இருபுறமும் கருக்குள்ள பட்டயம் (பரிசுத்த வேதாகமம்) இருக்கும் என்று சங் 149:8 ல் வாசிக்கிறோம். ஆனால் இன்று அநேக ஊழியர்கள், விசுவாசிகள் கையில் வேதத்துக்கு பதிலாக Cell phone இருப்பதை காணலாம்.

அடியேன் வேலை பார்க்கிற இடத்தில் ஒரு மரத்தின் கீழ் call taxi நின்று கொண்டு இருந்தது. அதில் இருந்த driver எதையோ படித்து கொண்டு இருந்தார். அருகில் சென்று பார்த்தேன். அவர் Bible படித்து கொண்டு இருந்தார். இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவன் பாக்கியவான் (ஆசிர்வதிக்கபடுவார்கள்) வெளி1:3

2) வேத வசனத்தை இருதயத்தில் சேர்த்து வைக்க வேண்டும்

வேத வசனங்களை நாம் மனப்பாடமாக படித்து அவைகளை நமது இருதயத்தில் பொக்கிஷ வைப்பாக வைத்து கொள்ளல் வேண்டும். நாம் படித்த வசனங்களை அடிக்கடி நமது நினைவிற்குக் கொண்டு வர வேண்டும். அப்படி செய்தால் அந்த தேவ வசனங்கள் ஒருக்காலும் நமது மனதைவிட்டு நீங்கவே நீங்காது. தேவன் அந்த வசனங்களின் மூலமாக அவ்வப்போது நம்மோடு பேசுவார்.

வசனம் இருதயத்தில் இருந்தால் நாம் பாவம் செய்ய மாட்டோம் ( சங் 119-11). நமது நடை பிசகாது (சங் 37-31)

கர்த்தருடைய வார்த்தைகளை எவ்வளவு இருதயத்தில் பதித்து கொள்கிறோமோ அவ்வளவுக்கு ஆசிர்வாதம் நமக்கு உண்டு. இன்று நான் உனக்கு கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்க கடவது – உபா 6-6

3) வேத வசனத்தை தியானிக்க வேண்டும்

ஆடு, மாடுகள் நடந்து செல்லும் போது கிடைக்கும் உணவை ( புல்லை) வேகமாக உண்டு செல்லும். மாலையில் தான் உண்ட புல்லை வாயில் கொண்டு வந்து அசை போடும். அதுபோல தேவ பிள்ளைகள் படித்த, இருதயத்தில் சேர்த்து வைத்த வசனத்தை தியானிக்க வேண்டும். ஆலயத்தில் கேட்ட செய்திகளை தியானிக்க வேண்டும்

நமது படுக்கையிலும் தேவனுடைய வசனங்கள்தான் நமது இருதயத்தை நிரப்பியிருக்க வேண்டும். நமது இராக்கால இளைப்பாறுதலில் வேறு எந்த ஒரு உலக கவலைகளுக்கும், மன பாரங்களுக்கும் இடம் கொடாமல் நாம் மனப்பாடமாக படித்த பல்வேறு வேத வசனங்களை நமது உள்ளத்தில் நினைவு படுத்திக் கொண்டேயிருந்தால் நமது இளைப்பாறுதல் இன்பமாக இருக்கும். நாம் வழியில் நடந்து போகும் போதும், நமது யாத்திரைகளிலும் ஆண்டவருடைய வார்த்தைகளை நமது உள்ளத்தில் சொல்லிக் கொண்டே போவது ஒரு தனிப்பெரும் ஆனந்தமாகும்.

உம்முடைய வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன், நாள் முழுவதும் அது என் தியானம் – சங் 119-97 என்று தாவிதை போல நாமும் கூற வேண்டும் உன் வழிகளிலெல்லாம் அவரை (வசனத்தை) நினைத்துக்கொள்: அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். (நீதிமொழிகள் 3:6)

கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம் 1-2

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends