புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம் என்றால் என்ன?

Share this page with friends

புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம் என்றால் என்ன?தேசங்களைப்பற்றியது அல்ல சபைப்பற்றியது.

பொருளடக்கம்.

  1. சுவிசேஷமே புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம்…..(லூக்கா 16:16 )
  2. விசுவாச பிரமாணத்திற்கு ஏற்றபடி சொல்லுவதே புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம்…. (ரோ12:6)
  3. பக்தி விருத்தி உண்டாக்குவது புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம் (1 கொரி 14:3,4)
  4. புத்தியுண்டாக பேசுவது புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம் (1 கொரி 14:3,4)
  5. ஆறுதல் உண்டாக பேசுதல் புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம். (1 Cor 14:3,4)
  6. உணர்த்துவிப்பதற்கு பேசுதல் புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம் (1 கொரி 14:24)
  7. நிதானிக்க வைப்பது புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம். (1 கொரி 14:24)
  8. சுவிசேஷமே புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம். (லூக்கா 16:16) நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யோவான்வரைக்கும் வழங்கிவந்தது; அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிறது, யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள்.

நீங்கள் சொல்லுகிற சுவிசேஷமே உண்மையான தீர்க்கதரிசனம்.

2. விசுவாச பிரமாணத்திற்கு ஏற்றபடி சொல்லுவதே புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம்.(Rom 12:6 ) ” நமக்கு அருளப்பட்ட கிருபையின் படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே, நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன்”.

பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம் நியாபிரமாணத்திற்கு ஏதுவானது புதிய ஏற்பாட்டுதீர்க்கதரிசனம் விசுவாசபிரமாணத்திற்கு ஏதுவானது.

ஆகவே தீர்க்கதரிசனம் இயேசுவின் கட்டளைகளுக்கு நேராய் நடத்துவதாக இருக்க வேண்டும். மனம்திரும்புதலுக்கு நேராக இருக்க வேண்டும்.

மழை, வெள்ளம், பூமியதிர்ச்சி, கொள்ளைநோய், யுத்தம், பொருளாதார வீழ்ச்சி இதையெல்லாம் இயேசு அவா் வருகிற வரையில் இருக்கும் என்று கூறிவிட்டார்.

ஆகவே இது எல்லாம் தீர்க்கதரிசனம் சொன்னாலும் சொல்லவிட்டாலும் நடக்கும். இதுக்கு வருடாவருடம் ஒரு தீர்க்கதரிசனமா?

இயேசு சொன்னதையே மீண்டும், மீண்டும் சொல்லுவது தீர்க்கதரிசனம் அல்ல. புதுவருடத்தில் புதுபிக்கவேண்டிய அவசியம் இல்லையே.(Renewel)பக்தி விருத்தி உண்டாக்குவது புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம். (1 Cor 14:3,4) பக்தி விருத்தி என்பதற்கு
I Greek : oikodome– “ஒய்கோடோமோ”
ஒய்கோடோமோ என்பது மூன்று குறிப்புகள்.”

கட்டி எழுப்புவது–building

தெளிய செய்வது—edifying.

வளரசெய்வது–promo

கிறிஸ்த்துவுக்குள், கிறிஸ்த்தவ ஞானத்தில், பக்தியில், மகிழ்ச்சியில், பரிசுத்ததில், வளர உற்ச்சாகமளித்தல்.

இவ்வளவு தெளிவாக வேதம் கூற சபைக்கு பக்தி விருத்தி அடைய கூறாமல் வெளியில் மேடையில் கூறுகிற தீர்க்கதரிசனம் எங்கேயிருந்து வந்ததது.

சபை பக்திவிருத்தி அடையாமல் தேசங்களை பக்திவிருத்தி அடைய செய்வதால் என்ன லாபம்.புத்தியுண்டாக பேசுவது புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம்…..
(1 Cor 14:3,4) Exhortation
In Greek : Paraklesis — பரக்கலிசிஸ்…

அருகில் அழைப்பது—-

இறக்குமதி செய்தல்—-

மனசமாதானம் உண்டாக்குதல்—

நயமான கண்டிப்பு—-

நினைப்பூட்டுதல்.

தூண்டி இயக்க வைத்தல்.

விலாசத்தை கிளருதல்.

தகவல் நிறைந்த போதனையை வழங்குதல்.

4. ஆறுதல் உண்டாக பேசுதல் புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம்.
(1 Cor 14:3,4)

Comfort In Greek – Paramuthia – ஆறுதல்ப்படுத்துதல்.

5. கிறிஸ்த்துவின் நிமித்தம் வருகிற உபத்திரவங்களை குறித்து ஆறுதல்படுத்துதல் பாவத்தின் நிமித்தம் வருகிற உபத்திரவங்களை குறித்து அல்ல.

6. உணர்த்துவிப்பதற்கு பேசுதல் புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம்.
(1 கொரி 14:24)

எல்லாரும், தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில், அவிசுவாசியொருவன், அல்லது கல்லாதவனொருவன், உள்ளே பிரவேசித்தால், அவன் எல்லாராலும் உணர்த்துவிக்கப்பட்டும், எல்லாராலும் நிதானிக்கப்பட்டும் இருப்பான்.
(1 கொரிந்தியர் 14:24)

7. நிதானிக்க வைப்பது புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம்.
1 கொரி 14:24

எல்லாரும், தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில்,அவிசுவாசியொருவன், அல்லது கல்லாதவனொருவன், உள்ளே பிரவேசித்தால், அவன் எல்லாராலும் உணர்த்துவிக்கப்பட்டும், எல்லாராலும் நிதானிக்கப்பட்டும் இருப்பான். (1 கொரிந்தியர் 14:24)

இந்த வசனங்களை நீங்கள் ஆழ்ந்து சிந்தித்தால் “சபைக்குள்” என்ற”வார்த்தை” அடிக்கடி வருவதை பார்க்க முடியும் சபைக்கு வெளியே மேடையில் கூறப்படுகிற தீர்க்கதரிசனங்கள் எங்கிருந்து வருகிறது. யாருக்கு வருகிறது?. என்பதை நீங்களே நிதானித்து பாருங்கள்.

தீர்க்கதரிசனங்கள் சபைகளை தான் நிதானிக்க வைக்க வேண்டுமே தவிர தேசங்களையல்ல, “தேசங்களில்” எந்த பிரதமர், அதிபர் வந்தால் நமக்கு என்ன? சபைக்கு என்ன லாபம்?.

யார் பிரதமராக, அதிபராக தேவன் கொண்டு வந்தாலும். சபை மேற்கொள்ளும்.

இதுக்கு ஒரு தீர்க்கதரிசனமா? புது வருடத்தில் மட்டும் தேவன் பேசுவதில்லை. வருடத்தின் எல்லா நாட்களிலும் அவா் பேசுகின்றார். எச்சரிக்கை.

இதை கேட்க பல லட்சங்கள் கூடுகிற சபையை நிதானிக்க வைத்தால் சபை பரலோகம் போகும்.

இவ்வளவு நாள் தேவன் பொறுமையாக இருந்தார் அவர் வருகை சமீபமாய் இருக்கிறபடியால் தேவன் பல பொய்யான தீர்க்கதரிசனங்களை வெளிப்படுத்தி சத்தியத்திற்கு செவிசாய்க்க ஜனங்களை ஆயத்தப்படுத்துகின்றார்.

வரக்கூடிய நாட்களில் இன்னும் பல பொய்யான தீர்க்கதரிசனங்களை ஜனங்களுக்கு வெளிப்படுத்தி காண்பிக்க போகின்றார்.

வசித்த அனைவருக்கும் நன்றிகள்.

Pr. N. SANTHOSH KUMAR.
Apostolic Church. Thirukovilur.


Share this page with friends