கர்த்தருக்கு பிரியமானது எது? பிரியமல்லாதது எது?

Share this page with friends

Old and Young

கர்த்தருக்கு பிரியமானது. பிரியமல்லாதது

கர்த்தருக்கு பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்தப்பாருங்கள். எபேசியர் : 5 : 10

இந்த செய்தியில் கர்த்தருக்கு பிரியமானதும் , பிரியமில்லாத தையும் சிந்திக்க போகிறோம். கர்த்தரை பிரியப் படுத்துவது நம்மேல் விழுந்த கடமை. அதே சமயத்தில் அவருக்கு பிரியமில்லாமலும் வாழக்கூடாது. எது பிரியம் ? எது பிரியம் இல்லை என்பதை சோதித்து தெரிந்துக்கொள்ள வேண்டும்.

 1. ஆவிக்கேற்ற பலி கர்த்தருக்கு பிரியம்
  1 பேது : 2 : 5
 2. தேவனுடைய ஜனங்களுக்கு கொடுப்பது கர்த்தருக்கு பிரியம்
  பிலி : 4 : 18
 3. நன்மை, தானதர்மம் செய்வது கர்த்தருக்கு பிரியம்
  எபி : 13 : 16
 4. ஆராதனை கர்த்தருக்கு பிரியம்
  எபி ; 12 : 28
 5. விசுவாசம் கர்த்தருஙக்கு பிரியம்
  எபி : 11 : 16
 6. சாட்சியாய் வாழ்வது கர்த்தருக்கு பிரியம்
  எபி : 11 : 5
 7. தேவனுடைய பிரமணத்தின்படி ஜீவிப்பது அவருக்கு பிரியம்
  ரோமர் : 7 : 22
 8. தேவனுடைய ஒழுங் கின்படி நடப்பது கர்த்தருக்கு பிரியம்
  1 தெசே : 4 : 2
 9. ஒப்புரவாக்குதல் கர்த்தருக்கு பிரியம்
  கொலோ : 1 : 20
 10. உற்சாகமாய்க் கொடுக்கிறவன் கர்த்தருக்கு பிரியம்
 11. பெற்றோருக்கு கீழ்படிதல் கர்த்தருக்கு பிரியம். கொலோ : 3 : 20
 12. விசுவாசிகள் இரட்சிப்பை அடைவது கர்த்தருக்கு பிரியம். 1 கொரி : 1 : 21
 13. கிருபைக்கு காத்திருப்பு. சங் : 147 : 11
 14. அவருடைய வேதத்தில் தியானமாய் இருப்பது கர்த்தருக்கு பிரியம் சங் ; 1 : 3 கர்த்தருக்கு பிரியமில்லாதது
 1. பின்வாங்கிப் போகிறது கர்த்தருக்கு பிரியமில்லாதது
  எபி : 10 : 38
 2. பார்வைக்கு ஊழியம் செய்வது கர்த்தருக்கு பிரியமில்லாதது
  எபே : 6 : 6
 3. மாம்சத்தக்குட்பட்டவர்களாக ஜீவிப்பது கர்த்தருக்கு பிரியம் இல்லை.
 4. நமக்கே பிரியமாய் நடப்பது கர்த்தருக்கு பிரியமில்லாதது.
  ரோம் : 15 : 1

எது கர்த்தருக்கு பிரியம் ? எது அவருக்குபிரிய மில்லை என்பதை வேத ஆதாரத்துடன் பார்த்தோம். கர்த்தருக்கு பிரியமானதை சோதித்து பாருங்கள் என்று வேதம் சொல்கிறது. நாமும் கர்த்தருக்கு பிரியமில்லாததை விட்டு விலகி கர்த்தரை மாத்திரம் பிரியப்படுத் துவோம்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur.


Share this page with friends