உங்கள் தலைவர் எப்படிப்பட்டவர்? எப்படிப்பட்டவர் தலைவராக வேண்டும்?

Share this page with friends

இன்றைக்கு உலகத்தில் அனைத்து துறைகளிலும் திறமைகள், அனுபவங்கள், பேச்சு நுணுக்கங்கள், சாவல்களை சந்திக்கும் திராணி, தீர்மானம் எடுக்கும் திறன் மற்றும் முன்னேற்ற பார்வை போன்றவற்றில் கருத்து கொண்டு தெரிந்து கொள்வர். ஆனால் ஆவிகுரிய தலைவர்களை எப்படி தெரிந்து கொள்ள வேண்டும்.

  1. பரிசுத்த ஆவி, ஞானம், நற்சாட்ச்சி, விசுவாசம் மற்றும் பணிவிடை போன்ற தெய்வீக சுபாவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  2. பிறரால், சூழலால், உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினைகளை கொண்டு தூண்டப்படாதவராக இருந்து நிதானமாக செய்வையான தீர்மானம் எடுக்கும் எந்த சாவல்களை சந்திக்கும் திறன் உடையவராக இருக்க வேண்டும்.
  3. சக ஊழியர்களின் வரங்கள், கிருபைகளை கண்டுபிடித்து அதற்கேற்ற opportunities கண்டுபிடித்து அவைகளை செயல்பட வைக்கும் அபிசேகம் உடையவராக இருக்க வேண்டும். எல்லாரையும் தன் தரிசன திட்டத்தில் இணைத்து கிறிஸ்துவின் வழியில் சீடர்களை உருவாக்கும் சாமர்த்திய திறன் உள்ளவராக இருக்க வேண்டும். சுய நலவாதிகள் வெறுக்கப்பட வேண்டும்.
  4. சாவல்கள் நெருக்கடிகள் போன்ற கடின சூழல் வரும் போது உபவாசம், ஜெபம், பக்திவிருத்தி, வசனம் என்று தெய்வீக காரியங்களில் தன்னை ஈடுபடுத்தி கொள்பவராக இருக்க வேண்டும்.
  5. நாம் எங்கே போகிறோம் என்கிற தரிசனம் மற்றும் மிஷன் பாரம் ஆத்தும பாரம் உடையவராக இருக்க வேண்டும்.
  6. தனது சக ஊழியத்தில் உள்ள ஊழியர்கள் குடும்ப விடயத்தில் அவர்கள் சபை விடயத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று நிற்காதபடி அவர்களை சந்த்தித்து அவர்களோடு நேரத்தை செலவு செய்து கிறிஸ்துவின் அன்பை இரக்கத்தை வெளிப்படுத்துகிறவராக இருக்க வேண்டும்.
  7. தன் சொந்த சபை, ஊழியம், மற்றும் குடும்பத்தை நல்லொழுக்கம் கொண்ட உறவில் வழிநடத்தி சக ஊழியர்கள் குடும்பத்திற்கு ஆசீர்வாதமாக இருக்க வேண்டும்.
  8. இங்கு ஒன்று பேசி, அங்கு ஒன்று பேசி, கண்டும் காணாமல் இருக்கும் அரசியல் சுபாவம் இல்லாதவராக இருக்க வேண்டும். நீதி நியாயம் பக்கம் துணை நின்று காரியத்தை ஜெயமாக முடிக்கும் காரிய சித்தி வேண்டும்.
  9. வீணான தொழில், பணம், பாலியல் கேடு, உறவு நெறிகளில் பிழை, அரசியல் போன்ற அலுவல்களில் குற்றம் சாட்டப்பட்டு அவைகளில் சிக்கி கொள்ளாதவராக இருக்க வேண்டும்.
  10. எல்லாவற்றுக்கும் மேலாக கிறிஸ்துவின் கிருபையின் அன்பில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு, எல்லாம் நான் தான் என்கிற அகங்காரம் கொள்ளாமல், தன்னால் முடியாததை பிறர் செய்ய வழிவிட்டு தனக்கு பின் நல்ல sucessor உருவாக்கும் திறன் படைத்தவராக இருக்க வேண்டும்.

இப்படிபட்ட அபிசேகம் பெற்றவர்கள் மற்றும் பதவி ஆசை, ஆளுகை இருமாப்பு இல்லாதவர்கள், ஆளுகை வந்த பின் நாங்கள் தான் எல்லாம் என்கிற கர்வம் இல்லாதவர்கள் கைகளில் ஸ்தாபன அமைப்புகள் கொடுக்கப்பட்டால் எழுப்புதல் நிச்சயம் சாத்தியமே! அந்த எழுப்புதல் தான் நம் வாஞ்சை ஆகட்டும்.

செலின்


Share this page with friends