நமக்கு கொடுக்கப்பட்ட குமாரன் எப்படிப்பட்டவர்

Share this page with friends

ஏசாயா 9:6
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

1.உன்னதமானவரின் குமாரன்

லூக்கா 1:32,33
அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார், கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.
33, அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார், அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்.
( சங் 91 உள்ள ஆசீர்வாதம் எல்லாம் விசுவாசிக்கிறவனுக்கு கிடைக்க்கும்)

2. நேச குமரன்

மாற்கு 1:10,11
அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே,வானம்திறக்கப்பட்டதையும்,ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார். மாற்கு1:11 அன்றியும்,நீர் என்னுடைய நேசகுமாரன்,உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று,வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.

3. பிசாசின் தீர்கைகளை அழிக்கும் குமாரன்

1 யோவான் 3:8
பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான். ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான். பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.

4. விடுதலைக்கும் குமாரன்

யோவான் 8:35,36
அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான், குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார். யோவான் 8:36.ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.


Pr.J.A.Devakar . DD


Share this page with friends