புதிய ஆண்டு எப்படி இருக்க வேண்டும்?

A. பரிசுத்த ஆவியானவர் நம் மத்தியில் இறங்கி கிரியை செய்ய இடம் கொடுப்போம்! பிதாவை துதித்து, கிறிஸ்துவை மகிமைபடுத்தி, ஜெபத்தில் காத்து இருப்போம், கிறிஸ்துவின் இரத்தத்தால் சுத்தம் மற்றும் பரிசுத்தம் ஆவோம் அப்போது பரிசுத்த ஆவியினால் உண்டாகும் எல்லா வரங்களும் கனிகளும் செயல்படும். ஒரு வரம் மற்றும் ஒரு கனியை மட்டும் தூக்கி பிடித்த வருடங்களில் இல்லாத பெருக்கத்தை அவர் கொண்டு வருவார். இனியாவது ஒரு வாரத்தில் சார்ந்து (தீர்க்கதரிசன வாரத்தில் மட்டும்) இருப்பதை விட்டு விடுவோம் அவரிடத்தில் ஏராளமான கிருபைகளும் கிருபா வரங்களும் இன்னும் இருக்கின்றன என்கிற அறிவுக்கு நேராக வருவோம்.
B. பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாட்டு சத்தியத்தில் சத்திய வசனம் என்ன கூறுகிறது, என்று சரியாக பகுத்து அவைகளின் படி வாழ ஒரு தீர்மானம் எடுப்போம் ஏனெனில் சத்தியத்தில் வெறும் வக்குத்தங்கள் மட்டும் அல்ல, கட்டளைகள், கடிந்து கொள்ளுதல் சீர்படித்துதல், கிறிஸ்துவை போல மாறுதல் போன்ற எத்தனையோ கோணங்கள் உள்ளது . வெறும் குறி வாக்குத்தங்களை மட்டும் சார்ந்து இராதப்படி சத்தியத்தை தியானித்து அவைகளின் படி ஆராந்து பார்ப்போம். வேதத்தின் அடிப்படையில் நாம் எங்கே இருக்கிறோம் என்று தேடி பார்ப்போம் அப்போது சத்தியம் நம்மை விடுதலை ஆக்கும். எபேசு பட்டணத்தில் நடந்து தானே இந்தியாவிலும் நடக்கும்.
C. நமக்கு நாமே திட்டம் வகுக்காதபடி, ஆண்டவரே நீர் என்ன செய்ய சித்தமாக இருக்கிறீர் என்று கேட்க கற்று கொள்வோம். ஆவியானவரால் வழி நடக்க கற்று கொள்வோம். அவர் சத்தம் கேட்டு அவர் சித்தம் செய்ய விட்டு கொடுப்போம். தோனல்கள் உதரல்கள் போன்றவற்றை கர்த்தர் சொன்னார் என்று வாய்க்கு வந்ததை சொல்லும் தகாத கற்பனைகளை விட்டு வெளியேறுவோம்.
D. கிறிஸ்துவையும், அவர் சிலுவை மரணம் அவரது இரத்தம், மற்றும் அவரது உயிர்த்தெளுதல் மற்றும் அவரது ராஜ்ஜியம் போன்றவற்றை பிரசங்கத்தில் கூட்டி கொள்வோம். இப்படிபட்ட வாழ்வில் தான் நாம் கடந்து செல்ல வேண்டும் தொடர்ந்து அறிவிறுத்துவோம். ஏனெனில் இவைகள் தான் நம்மை ராட்ச்சிக்கும். இவகளில் தான் கிருபை, விசுவாசம், நம்பிக்கை, பாவமன்னிப்பு, பரிசுத்தம் etc இருக்கிறது.
E. அங்கே அற்புதம், அவரை கொண்டு அற்புதம் என்று யாரையும் தேடி நாடி போகாதபடி சபைக்குள் கூட அப்படி பட்ட ஊழியங்கள் இருக்கிறது என்பதை உணர்ந்து, சபை தான் கிறிஸ்துவின் சரீரம் என்றும் உணர்ந்து சபைக்குள் எல்லா ஊழியங்களையும் உற்சாகப்படுத்தி சபையை பக்திவிருத்தி அடைய செய்வோம். ஏனெனில் சபையை சேர்த்து கொள்ள தான் அவர் சீக்கிரம் வருகிறார்.
F. தேசத்தில் என்ன நடக்கும், தேசத்தில் யார் ஆட்ச்சி, நாளைக்கு என்ன நடக்கும் நாளைக்கு என்ன கிடைக்கும் என்கிற கோணத்தில் இருந்து வெளியே வருவோம். தேசத்தை எப்படி சுவிசேஷத்தை கொண்டு நிறைக்க முடியும் என்று சிந்திப்போம். இயேசு கிறிஸ்து சிங்காசனத்தில் வீற்று இருந்து, சபைக்கு தலையாக இருக்கிறார் என்பதை அறிந்து அவரின் ஆளுகை அதிகாரம் மற்றும் வல்லமையை நம்பி முன்னேறுவோம். அவரை நம்புகிற மனுசன் எவனும் வெட்கபடுவத்தில்லை.
G. மொத்தத்தில் நிலையற்ற இந்த உலகத்தில் விசுவாசிகளை சார்ந்து இருக்க செய்யாத படி வரப்போகிற நித்திய ராஜியத்திற்கு என்று பாடுபடுவோம். உழைப்போம். அவர் சித்தம் செய்து அவர் ராஜியம் வரட்டும் என்று காத்திருந்து ஒருவரை ஒருவர் மன்னித்து தாங்கி செயல்படுவோம். ஏனெனில் ராஜியம் கனம் மகிமை எல்லாம் அவருடையது.
கர்த்தர் அவரது ராஜ்யத்தின் வல்லமையால் நம்மை இந்த கடைசி நிமிடத்தில் நிரப்பி அவரது திட்டத்தை மறுபடியும் நம்மை கொண்டு நிறைவேற்றுவதாக ஏனெனில் அவர் இன்னும் நம்மை கொண்டு செய்ய வேண்டிய காரியங்கள் ஏராளம் உண்டு. அவைகளை காண்போம் தரிசிப்போம் அவரது மகிமை வல்லமை மற்றும் சாயல் நம்மில், சபையில், தேசத்தில் விழங்கட்டும். அவர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.
செலின்.