இவர்கள் யார் என கேட்டால் நீங்க என்ன சொல்லுவீர்கள்?

Share this page with friends

தேவன் எனக்கு அருளின குமாரர்

ஆதியாகமம் 48: 8, 9. யாக்கோபு தன் மகன் யோசேப்பின் குமாரரை பார்த்து, இவர்கள் யார் என கேட்டார். அதற்கு யோசேப்பு தன் தகப்பனை நோக்கி, இவர்கள் இவ்விடத்தில் தேவன் எனக்கு அருளின குமாரர் என்றான்.

  1. ஆம், இன்று இந்த கேள்வி நம்மிடம் கேட்கப்பட்டிருந்தால் நம் பதில் என்னவாயிருக்கும்? இவர்கள் என் பிள்ளைகள் என்று தானே கூறுவோம். அன்று யோசேப்பிற்கு வேதமும் இல்லை, சபையும் இல்லை. ஆனால், தகப்பன் யாக்கோபு வளர்த்த விதத்தை சிந்தித்து பார்ப்போம். மட்டுமல்ல, கர்த்தரே யோசேப்போடிருந்து அவனுக்கு கர்த்தருக்கு பயப்படுகிற பயத்தையும், எப்படி வார்த்தைகளினாலும், கிரியைகளினாலும் கர்த்தரை மகிமைப் படுத்த வேண்டும் எனறு போதித்திருக்கிறார் என்றும், அதற்கு யோசேப்பு எவ்விதம் கீழ்ப்படிந்தார் என்றும் நாம் அறிந்து கொள்ளலாம். நாமும் கூட கர்த்தர் எனக்கு கொடுத்த பிள்ளைகள் என அறிக்கையிட்டு கர்த்தரை மகிமைப்படுத்துவோம்.
  2. பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம். கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். சங்கீதம் 127: 4 இந்த சத்தியத்தை யோசேப்பு அறிந்திருந்தார். ஆனால் இன்றைய கிறிஸ்தவர்கள் அறிந்து கொள்ளவில்லையே. குழந்தையில்லை என தன் மனைவியை வார்த்தைகளால் புண்படுத்துகிற கணவன்மார், மாமியார், மாமனார் இவ்விதம் வார்த்தைகளால் காயப்படுத்தாமல் ஈசாக்கு ரெபேக்காளுக்காக ஜெபித்த விதமாக ஜெபிக்கலாமே! சகோதரிகள் அன்னாளை போல தங்கள் இருதயத்தின் சஞ்சலத்தை கர்த்தருடைய சமூகத்தில் ஊற்றி ஜெபிக்கலாமே! அப்பொழுது தேவன் எனக்கு அருளின குமாரர் என நாமும் கூறலாம் அல்லவா?
  3. இன்று கர்த்தர் நமக்கு கொடுத்த பிள்ளைகளுக்காக நம் வார்த்தைகளாலும், கிரியைகளாலும் அவரை மகிமைப்படுத்த வேண்டும். அதாவது அவர்களை கர்த்தரை அறிகிற அறிவிலே, கர்த்தருக்கு பயப்படுகிற பயத்திலே, கர்த்தரை மகிமைப் படுத்துகிறவர்களாய், பரலோக ராஜ்யத்திற்கு அவகாசிகளாய் வளர்க்க வேண்டும்.
  4. மட்டுமல்ல, கர்த்தர் நமக்கு கொடுத்த குமாரர்களை கர்த்தருடைய குமாரர்களாய், ஜெயங்கொள்கிறவர்களாய் வளர்க்க வேண்டும்.
    வெளிப்படுத்தல் 21: 7.

ஆம், நம் வாழ்க்கையில் நாம் பெற்ற அனைத்து ஆசீரவாதங்களும் கர்த்தர் நமக்கு கொடுத்தவைகளே. நம் பிள்ளைகள் கர்ததர் நமக்கு கொடுத்தவர்கள் என்ற எண்ணத்தோடு, பயத்தோடும், பக்தியோடும், நன்றியுள்ள இருதயத்தோடும் கர்த்தருக்காக அவர்களை வளர்ப்போம். ஆமேன். அல்லேலூயா.

Dr. Padmini Selvyn.


Share this page with friends