எங்கே கிறிஸ்தவம்?

Share this page with friends

வழி மாறிப்போன கிறிஸ்தவர்கள்…

வழி தவறிப் போன கிறிஸ்தவ வாழ்க்கை……

இன்று போதகர்கள் போதனைகளை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றி விட்டார்கள்,,,,

லட்சியத்தோடு காடு மேடு கடந்து சுவிசேஷம் அறிவித்த இறை மனிதர்கள் இறந்துவிட்டார்கள்,,,,

இன்று சில லட்சங்களுக்காய் போதகர்கள் என்னும் போர்வையை போர்த்திக்கொண்டு சிலர் அலைகிறார்கள்,,,,

சபைகளில் ஆடம்பரம் பெருகிவிட்டது, .,

அங்கு ஜனங்களும் பெருகிவிட்டார்கள்,,,,

தேவ வார்த்தைகளை போதிக்கும் சபைகளில் ஒருவனும் இல்லை ,,,,

எல்லோரும் ஆடம்பரத்தை தேடி ஓடி விட்டார்கள்,,,,,

தனக்கென ஒரு உபதேசம் தனக்கென ஒரு கோட்பாடு,,,,

வேதத்தை அவனவன் பிரித்து தன் தன் சட்டைப்பையில் வைத்து விட்டான்,,,,

கிருபை உபதேசம் என்றான் ஒருவன் ,,,

நியாயப்பிரமாணம் என்றான் மற்றொருவன்,,, .

இது விசுவாச போதனை என்றான் ஒருவன்,,,,

அற்புதம் தான் என் ஊழியம் என்றான் மற்றொருவன்,,,,,

பாவம் செய் இனி தண்டனை இல்லை என்றான் ஒருவன் ,,,,,

பாவமே செய்ய முடியாது நீ கிறிஸ்தவன் என்றான் இன்னொருவன்,,,,,

யார் போதகர் யார் விசுவாசி என்று தெரியவில்லை, .,,

எல்லோரும் மைக்கும் கையுமாய் அலைகிறார்கள்.,,,,

பாவம் நடுவில் மாட்டி தவிக்கிறான் அடிமட்ட கிறிஸ்தவன்,,,,

பரிசுத்த பிரசங்க பீடத்தில் அவனவன் தன் தன் இஷ்டப்படி வந்து ஆடுகிறான்,,,,

இயேசுவின் பெயரால் மாய வித்தைகளை செய்கிறான்.,,,,

மாயஜால வார்த்தைகளை பேசுகிறான்.,,,

எது சரி எது தவறு என்று அறியாத கூட்டத்தை சேர்த்துக் கொண்டு பணம் சம்பாதிக்கிறான்,,,,

கிறிஸ்தவத்தை மதமாக்கி,,,

பணத்தை கடவுளாக்கி ,,,

இயேசுவை காட்சிப் பொருளாக்கி.,,

அந்நியனை விட கேவலமாய் ஆக்கிவிட்டான் கிறிஸ்தவன்,,,,,

பொய்யான தீர்க்கதரிசனங்கள் ,,,,

ஆவியே இல்லாத அந்நியபாஷைகள்,,,,

தெருவுக்குத் தெரு சபைகள்,,,,

அழைக்கப்படாத போதகர்கள்,,,,

ஆடம்பரமான விசுவாசிகள் ,,,

வேதத்தை புரட்டும் பிரசங்கங்கள்,,,

உலகமயமான ஊழியங்கள்,,,

கிறிஸ்தவன் வீழ்ந்துகொண்டிருக்கிறான் ,,,,

கிறிஸ்தவம் அழிந்து கொண்டிருக்கிறது,,,,

காரணம் வேதத்தை இதுவரை திறந்து வாசிக்காமல் ,,,,

எவனோ சொல்வதைக் கேட்க ஓடும் கிறிஸ்தவ கூட்டம்,,,,

வேதத்தை வாசி அது உனக்கு வழிகாட்டும் எல்லோருக்குள்ளும் இருக்கும் ஆவியானவர் ஒருவரே ஆமேன்,,,,,,

யோவான் 8:32
சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.,,,,

கிருபை

மக்கள் அதிகம் வாசித்தவை:

சந்தன மாலையிட்டு மக்கள் மரியாதை; இவங்களுக்கு செய்யுறதுல தப்பே இல்ல!
கரும்பு விவசாயி ராஜாங்கம் தற்கொலை செய்து கொண்ட அவருடைய குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க உலக ...
மெலிந்தோருக்கும் நலிந்தோருக்கும்! வித்யா'வின் விண் பார்வை!
ஐயா..அம்மா..நான்தான் எலிமா! (தொடர்ச்சி) வித்யா'வின் பார்வை
பிரசங்க குறிப்புகள்: வெறுத்துவிடுங்கள்
தேவனுடைய ஆலயம் (சங்கீதத்தில்)
நாட்டுப்புறக் கலைச்சுடர் விருது பெற்ற நெல்லை தங்கராசுவிற்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை ...
Why there is suffering and too much of evils?
ஆப்பிரிக்க காடுகளின் மலைவாசிகள் மத்தியில் சி.டி. ஸ்டட்
எலிசபெத்தை வாழ்த்தினாள் ! ஏன்? எப்படி? எதற்கு?

Share this page with friends