பாளயத்திற்கு உள்ளேயாகிலும், பாளயத்திற்கு புறம்பேயாகிலும்

Share this page with friends

பாளயத்திற்கு உள்ளேயாகிலும், பாளயத்திற்கு புறம்பேயாகிலும்

லேவியராகமம் 17: 1 – 6.

1. இங்கு கர்த்தர் ஆசாரியர்களாகிய ஆரோனோடும், அவன் குமாரரோடும், இஸ்ரவேல் ஜனங்களோடும் எங்கு, எப்படி பலி செலுத்த வேண்டும் என கட்டளை கொடுக்கிறார். அதாவது மாட்டையோ, ஆட்டையோ பாளையத்திற்குள்ளேயாகிலும்,பாளயத்திற்கு புறம்பேயாகிலும் பலி செலுத்தினால், கொன்றால்,

1. அது அந்த மனிதனுக்கு இரத்தப்பழியாக எண்ணப்படும்.
2. அவன் தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டு போவான்.
ஆம், இது எவ்வளவு பெரிய பாவம் என தியானித்து பார்ப்போம்.

2. அப்படியானால் நாம் எங்கு பலி செலுத்த வேண்டும்?

ஆசரிப்பு கூடார வாசலாகிய வாசஸ்தலத்திற்கு முன்பாக இருக்கிற பலிபீடத்தில் பலி செலுத்த வேண்டும். வாசஸ்தலத்திற்கு முன்பாக கழுவி சுத்திகரிக்க தண்ணீர் தொட்டியும், பலிபீடமும் இருக்கிறது. அப்படியானால் நாமும் கூட இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்ட பின்னரே கர்த்தரை பாடி ஆராதிக்க வேண்டும்.

3. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை என்ன?

நாம், கர்த்தருக்கு பலி செலுத்தும் போது, நம்மையே பலியாக ஒப்புக்கொடுக்கும் போது, கர்த்தரை ஆராதிக்கும் போது, தொழுது கொள்ளும் போது கர்த்தருடைய பிரசன்னத்தில், வாசலாகிய கிறிஸ்துவின் பிரசனனத்தில், அதாவது கர்த்தர் தங்கும் ஆசாரிப்பு கூடார வாசலாகிய, வாசஸ்தலத்திற்கு முன்பாக பலிபீடத்தில் பலி செலுத்த வேண்டும். மாறாக பாளயத்திற்கு உள்ளேயோ, வெளியேயோ செலுத்த கூடாது. அதாவது கர்த்தருடைய பிரசன்னம், இல்லாத இடத்தில் செலுத்த கூடாது. நம்மை இயேசுவின் இரத்தத்தால் கழுவி சுத்திகரிக்கும் போது, தேவ பிரசன்னம் நம்மை நிரப்பும்.

ஆனால் இன்றைய சபைகளில், குடும்பங்களில், தனி வாழ்க்கையில் பலி செலுத்த சிலாக்கியம் பெற்ற நாம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தில் பலி செலுத்த வேண்டும் என்ற கட்டளையை மறந்து பாடுகிறோம், ஆராதிக்கிறோம். ஆனால் நம் இருதயமாகிய பலிபீடம் வாசலாகிய கிறிஸ்துவின் பிரசன்னத்தால் நிரப்பப்பட்டு, வசனத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு, அதன் பிறகு நம் பலியாகிய ஆராதனை, பாடல், தியானம் ஆகியவை கர்த்தருக்கு ஏறெடுக்கப்படுகிறதா? நம்மை ஆராய்வோம்.

மட்டுமல்ல, பலி மிருகம் கொல்லப்பட்டு, பலிபீடத்தில் இரத்தம் தெளிக்கப்பட வேண்டும். அதாவது நம்முடைய சுயம், நான், எனது, எனக்கு என்ற எண்ணங்கள், சுய ஞானம், விருப்பம், சித்தம் யாவும் கொல்லப்பட வேண்டும். அதாவது பழைய மனுஷன் மரிக்க வேண்டும். நம்மையே ஜீவபலியாக, உயிருள்ள பலியாக பலிபீடத்தில் படைக்க வேண்டும்.

கொழுப்பை கர்த்தருக்கு சுகந்த வாசனையாக தகனிக்க வேண்டும். ஆம், நம்முடைய பெருமை, மேட்டிமை யாவும் தகனிக்கப்பட்டு, இயேசுவைப் போல தாழ்மையுள்ளவர்களாய், நம்மை, நம் வாழ்க்கையை, சாட்சியை பார்க்கும் போது, கர்த்தருக்கு வாசனை கொடுக்க கூடியதாய் மாற வேண்டும்.

இவ்விதமாக நாம் தேவ பிரசன்னத்தால் நிரம்பியவர்களாய் கர்த்தரை ஆராதிக்க வேண்டும். அதாவது நம் பாவங்களை அறிக்கையிட்டு பரிசுத்த ஸ்தலத்தில், பரிசுத்த உள்ளத்தோடு கர்த்தரை பாடி, துதித்து, ஆராதிக்க வேண்டும். இதுவே கர்த்தருடைய வாசஸ்தலத்திற்கு முன்பாக செலுத்த வேண்டிய பலி. மாறாக பாளயத்திற்குள்ளும், பாளயத்திற்கு வெளியேயும் ஆராதித்து கொண்டிருப்போமானால், நம் மேல் இரத்தப்பழி சுமராமல், நாம் அறுப்புண்டு போகாமல் மனம்திரும்புவோம். எச்சரிக்கையாய் பாடுவோம், துதிப்போம், ஆராதிப்போம், பலி செலுத்துவோம். ஆமேன். அல்லேலூயா.

Dr. Padmini Selvyn.

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends