தாயின் வயிற்றிலிருக்கும்போதே

Share this page with friends

“தாயின் வயிற்றிலிருக்கும்போதே…” (லூக்கா 1:15)

“நான் ஏன் பிறந்தேன்? எதற்கு வாழ்கிறேன்? என் வாழ்வில் ஏன்? இவைகளெல்லாம் சம்பவிக்கின்றன? நான் பிறவாமலிருந்தால் நலமாயிருக்குமே,” என்று உலகத்தின் சூழ்நிலை மனிதர்களுக்குள் இவ்வாறு கேள்விகளை எழுப்புகின்றன,

பரிசுத்த வேதாகாமமோ, நாம் தாயின் வயிற்றில் இருக்கும்போதே “தேவனின்” அநாதி தீர்மானத்தின் திட்டங்கள் தொடங்கிவிட்டன என்று சுட்டிக்காட்டுகின்றன!!! மேற்கண்ட கேள்விகள் நமக்குள் எழும்போது இவ்வசனங்கள் நம்மை ஆறுதல் செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றன.

தாயின் கருவினிலே “கர்த்தர்”…

1 – “கருவினிலே” உருவாக்கினார். (ஏசா 44:2).

2 – “கருவினிலே” காப்பாற்றினார் (சங் 139:13).

3 – “கருவினிலே அறிந்துகொண்டார் (எரே 1:5).

4 – “கருவினிலே ஏந்தினார் (ஏசா 46:3).

5 – “கருவினிலே” ஆதரித்தார் (சங் 71:6).

6 – “கருவினிலே” பிரித்தெடுத்தார் (கலாத் 1:15).

7 – “கருவினிலிருந்தே” நம் தேவனாயிருக்கிறார். சங் 22:10

“நான் ஏன் பிறந்தேன்?” என்ற கேள்விக்கு இடமில்லைதானே?

“தாயின் கருவில் தோன்றுமுன்னே தெரிந்து கொண்டீரே தாயைப்போல சேர்த்து காத்து அனைத்து கொண்டீரே” இயேசுவே.!!!.

ஆமென்
அல்லேலூயா


Share this page with friends