பனி மேகங்களுக்குள்ளே ஓர் வெள்ளை மாளிகை!வித்யா’வின் பார்வை!

Share this page with friends


வெண்மையான மேகங்களை (Mist) ஊடுருவி செல்லுங்கள்

உங்கள் வாழ்வில் தனியாகவோ,
குடும்பமாகவோ,  சபையாகவோ
ஆராதிக்கும் போதும்
ஜெபிக்கும்போதும்  தேவன் கொடுத்த
நல்வார்த்தைகள் ஒருவேளை இன்னும்
நிறைவேறாமல் இருக்கலாம்


அவை நிறைவேறும் காலத்தைக்
கர்த்தர் அறிவார் 
வசனம் நிறைவேறுவதற்குள்
வேண்டாம் விசனம்

காலம் நிறைவேறும் போது,
கர்த்தர் உங்களை வந்து சந்திப்பார்
சாராளைக் கடாட்சித்தவர்
இன்றும் ஜீவிக்கிறார்
(ஆதியாகமம் 21:1)

உங்கள் கட்டுகள் நீங்கும்,
கார்மேகங்கள் விலகும்,
உள்ளங்கை மேகம் தென்படும்
வனாந்திரமும் வறண்ட நிலமும்
மகிழ்ந்து, கடுவெளி களித்து,
புஷ்பத்தை போல செழிக்கும்

(ஏசாயா 35:1) மட்டுமல்ல.

நீங்கள் பயப்படாதிருங்கள்
திடன்கொள்ளுங்கள்
இதோ, உங்கள் தேவன்
நீதியை சரிக்கட்டவும்
உங்கள் தேவன் பதிலளிக்கவும்
வருவார்
(ஏசாயா 35:4) என்ற
வார்த்தையின்படி
தேவன் உங்களுக்கு
பதில் அளிக்க வருவார்.


உங்கள் கண்களுக்குப் புலப்படாத
ஒரு வளமான வாழ்வு,
செழிப்பான வாழ்வு
இருளில் நடமாடும்
கொள்ளைநோய்களுக்கு நடுவே, 
பனி மேகங்களுக்குள்ளே 
மறைந்திருக்கிறது.
அந்த வெண்மையான மேகங்களை (Mist)
ஊடுருவி செல்லுங்கள்.


கொரோனா இரண்டாம் அலை
வீசுகிறதை நினைந்து
கவலைப்படவேண்டாம்
“அந்தக் கழுதையை விடுங்கள்”
(1 சாமுவேல் 9:20).

சந்தோஷப்பட்டு களிகூரும்படியான
நீர்வளம் பொருந்திய நிலம் போல
உங்கள் வாழ்வு
வெள்ளை மாளிகை போல
உங்கள் கண்களில் தெரியும்.
அதற்குள் பிரவேசிக்க
எதிர்வரும் 20 – ம் தேதிவரை
காத்திருக்கவேண்டாம். 
இது அமெரிக்க

வெள்ளை மாளிகை அல்ல.

வாக்குறுதி அளித்தவரின்
கரங்களைப் பிடித்துக் கொண்டு
மனத்தாழ்மையும் சாந்தமும்
அன்பும் கலந்த கம்பீர நடையுடன்

புதிய வருடத்தில் இந்த17- ம்  நாளையும் கடந்து
தொடர் பயணம் மேற்கொள்ளுங்கள்

அவருடைய நல்வார்த்தைகளில்
எல்லாம் ஒரு வார்த்தையானாலும்
தவறிப் போகவில்லை

(1 இராஜாக்கள் 8: 56) என்று
சாலமோன் சொன்னதுபோல
நிச்சயம் நீங்களும்  சொல்வீர்கள்.

வேத வாசிப்பும் தேவ நேசிப்பும் தொடரட்டும்
வாசிக்க நேரம் ஒதுக்கிய உங்களை வாழ்த்துகிறேன்.

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள், மதுரை -14


Share this page with friends