வேதாகமத்தில் நான் யார்?

Share this page with friends

வேதத்தில் நடந்த காரியங்களை சம்பவங்களை கொடுத்துள்ளோம். அவைகள் யாரை குறிக்கிறது என சொல்லவும். (வேத வசனத்தோடு)

1. சமாதானத்திற்கு அனுப்பப்படும் பறவையைப் போல் புலம்பினேன் ?

2. புதுபெலன் அடையும் பறவையின் இறகுகளைப் போல என் தலைமயிர் மாறியது ?

3. புழுப்புழுத்து இறந்தேன் ?

4. மனிதர்களால் அல்ல குளவிகளால் தோற்றோம் ?

5. வயதான காலத்தில் நடக்க உதவும் உறுப்பில் வியாதி எனக்கு ?

6. நீட்டிய என் கையை மடக்கக் கூடாமல் தேவன் நிறுத்தினார் ?

7. கர்த்தரின் வீட்டைப் புதுப்பித்தேன் நான் ?

8. விவசாயத்தில் ஈடுபாடு கொண்டன் நான் ?

9. குடலில் தீராத வியாதி கொண்டு விரும்புவாரில்லாமல் இறந்தேன் நான் ?

10. கர்த்தருடைய சமுகத்தில் ஊழியம் செய்பவர்களை கொன்று போடக் கூறினேன் ?

11. சீஷர்களின் எண்ணிக்கை வயதில் ராஜாவான நான் கைது செய்யப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டு போகப் பட்டேன் ?

12. எனது பாவத்தால் என் பிள்ளை வியாதிபட்டுக் கேவலமாயிருந்தது ?

13. கவிதைகள் எழுதுவதில் கைதேர்ந்தவன் நான் ?

14. ஓரெழுத்து மட்டுமே எனது பெயர் ?

15. என்னைப்போல ஒருவன் எனக்கு முன்னரும் இல்லை எனக்குப் பின்னரும் இல்லை ?

பதில்கள்

1. எசேக்கியா – ஏசா 38: 14 2 – நேபுகாத்நேச்சார் தானியல் 4 :33
3 – ஏரோது அப்போஸ்தலர் 12 :21 – 23
4- எமோரியரின் இரண்டு ராஜாக்கள். யோசுவா 24 :12
5 – ஆசாவின் 1 இராஜாக்கள் 15 :23
6 – யெரொபெயாம் 1 இராஜாக்கள் 13 :4
7 – யோவாஸ் . 2 நாளாகமம் 24 :4
8 – உசியா வெள்ணாண்மைப் பிரியனாயிருந்தான். 2 நாளாகமம் 26 :10
9 – யோராம்2 நாளாகமம் 21 :18
10 – சவுல், அப்போஸ்தலர் 9 :1
11- மனாசே. 2 நாளாகமம் 33 :11
12 – தாவீது2 சாமுவேல் 12 :15
13 – சாலொமோன்1 இராஜாக்கள் 4 :32
14 – சோ 2 இராஜாக்கள் 17 :4
15-எசேக்கியா. 2 இராஜாக்கள் 18 :5

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends