யார் பேச்சை கவனிக்கிறீர்கள்? அல்லது யார் பேச கேட்கிறீர்கள்?

Share this page with friends

யார் பேச்சை கவனிக்கிறீர்கள்? அல்லது யார் பேச கேட்கிறீர்கள்?

இன்று யாரை பார்த்தாலும் நியூஸ் கேட்டீர்களா? இந்த மருத்துவர் சொன்னதை கவனித்தீர்களா? அரசாங்கம் சொல்வதை கேட்டீங்களா? வெளியே போகாதிருங்கள்? இந்த மருந்தை எடுங்கள்! அந்த மருந்தை எடுங்கள்! இதை பின்பற்றுங்கள்! அதை செய்யுங்கள் கொரோனா வரவே வராது என்று எத்தனையோ வித விதமான ஆடியோ மற்றும் வீடியோ கிளிப்புகள்?

எதை தான் கேட்பது? எல்லாவற்றையும் கேட்டு விட்டு, எதை பின்பற்றுவது? எல்லா மருத்துவர்கள் சொல்லும் எல்லா மருந்தையும் ஒன்றன் பின் ஒன்றாக ஆவேற்றமாக எடுக்க தான் முடியுமா? அப்படி எடுத்தால் வேலைக்கு ஆகுமா? மருந்துகள் எல்லாம் என்ன ஆகாரமா?

ஒவ்வொருவரும் தங்கள் அனுபவம், அறிவின் அடிப்படையில் சொல்லத்தான் செய்வார்கள். அதற்காக ஒவ்வொருவரும் சொல்வதை மாறி மாறி செயல்படுத்தினால் வேலைக்கு ஆகுமா? அவைகளால் நிரந்தர பலன் தர முடியுமா? சில வேளை பலன் தரும் சிலவேளை பலன் தராமல் போகலாம்! அப்படி அவர்கள் சொல்லும் மருந்தை எடுத்தாலும் எத்தனை மருந்தை எடுக்க முடியும்? யார் சொல்லை கேட்க?

எனவே கொஞ்ச நாளைக்கு இவைகளுக்கு கொஞ்சம் முழுக்கு போட்டு விட்டு கர்த்தர் என்ன சொல்கிறார்? நம்மை உருவாக்கினவர் என்ன சொல்கிறார்? என்ன சொல்லி இருக்கிறார் என்று அவர் பக்கம் திரும்புவோம்! அவர் சொல்ல கேட்போம்? அவரிடம் நமக்கு தேவையான வழிமுறைகள் உண்டு? நாம் இந்த சோதனைக்கு தப்பி செல்ல வழியும் போக்கும் அவரிடம் இருக்கிறது! அவர் சரியாக நமக்கு பிரயோஜனமானது என்ன என்று அறிந்து நடத்துவார். அவர் என்ன சொல்கிறார் என்று கொஞ்சம் கவனிப்போம்! அவர் சத்தம் கேட்போம். அவர் சித்தம் செய்வோம்.

Matthew 24:7
ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகள் சம்பாவிக்க வேண்டியதே ஆனாலும் முடிவு உடனே வராது. ஏனெனில் இவைகள் வேதனைக்கு ஆரம்பம்.

என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறார். அதினால் நாம் அப்போது என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார்.

1. வீட்டின் மேல் இருக்கிறவர்கள் எதையாகிலும் எடுக்க கீழே இறங்காதிருக்க கடவன். வீட்டிலே தரித்து இருங்கள்.

2. வஞ்சிக்கபடாதப்படி எச்சரிக்கையாக இருங்கள் ஏனெனில் அங்கே விடுதலை, அந்த மருந்து, இந்த மருந்து என்று விடுதலையை குறித்து பேசி வஞ்சிக்க பார்ப்பார்கள். பிணம் எங்கயோ அங்கு கழுகுகள் கூடும். அப்படி அற்புதம், இப்படி அற்புதம், என்றாலும் நம்பாதிருங்கள்.

3. இருதயம் கலங்காதபடி எச்சரிக்கையாக இருங்கள். பயப்படாதிருங்கள். எப்படியும் மரணம் ஒருநாள் சந்திக்க தான் போகிறது. தலை மயிரில் ஒன்றும் அழியாது. மீட்பு சமீபமாக இருப்பதால் நிமிர்ந்து பார்த்து தலைகளை உயர்த்துங்கள்.

4. விழித்து இருங்கள். ஜெபித்து ஆயத்தமாக இருங்கள். அவசரப்படாதிருங்கள். பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களை காத்து கொள்ளுங்கள்.

5. புத்தி உள்ளவர்களாக இருங்கள். அபிசேகம் என்னும் எண்ணெயால் நிரம்பி இருங்கள். ஒருவரும் எதிற்பேச முடியாத வாக்கையும் ஞானத்தையும் அவரே தருவார்.

6. தாலந்துகளை பயன்படுத்துங்கள். சோம்பலும் பொல்லாதவனுமாகிய ஊழியக்காரன் போன்று தாலந்தை குறித்தும் சூழ்நிலைகளை குறித்து குறை கூறி புதைத்து வைக்காதிருங்கள்.

7. கடைசியாக மிகவும் சிறியவராகிய கர்த்தருடைய சகோதரர்களுக்கு தொண்டு செய்யுங்கள். வஸ்திரமில்லாதவர்களுக்கு வஸ்திரம் கொடுங்கள், போஜனம் கொடுங்கள், தாகம் தீருங்கள், சேர்த்துக்கொள்ளுங்கள், வியாதியில் விசாரியுங்கள் போன்றவைகளே!

இந்த நித்தியமான, அற்புதமான சத்திய வார்த்தைகளை கவனித்தால், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நமக்கு போதித்து நடக்க வேண்டிய வழியில் நம்மை நடத்துவார். ஏனெனில் நம்மை அழைத்தவர் உண்மை உள்ளவர் அப்படியே மரணபரியந்தம் நம்மை நடத்துவார். அவரை கவனிப்போம் ஏனெனில் அவர் சொல்ல ஆகும், கட்டளை இட நிற்கும்.

(மத்தேயு 24 மற்றும் 25 லூக் 21 ஆவது அதிகாரங்கள்.)

செலின்


Share this page with friends