யார் அந்த ஒருவன்?  வித்யா’வின் பதிவு

Share this page with friends

உங்களுக்கும்
கிறிஸ்துவுக்கும் இடையே
ஒருபோதும் ஒருவனும் நுழைந்து

வஞ்சித்துவிடாதபடி
பார்த்துக் கொள்ளவேண்டும்.   

“அவருக்குள் ஞானம் அறிவு

என்பவைகளாகிய
பொக்கிஷங்களெல்லாம்

அடங்கியிருக்கிறது”
(கொலோசெயர் 2:3)   

அதோடுகூட
தேவத்துவத்தின்
பரிபூரணமெல்லாம்
சரீரப்பிரகாரமாக

அவருக்குள் வாசமாயிருக்கிறது  
(கொலோசெயர் 2:9)    

அவருக்குள் நீங்கள்

பரிபூரணமுள்ளவர்களாய்
இருக்கிறீர்கள்
(கொலோசெயர் 2:10)   


இப்படியிருக்கும்போது நமக்கும்
கிறிஸ்துவுக்கும் இடையே
அந்த ஒருவனுக்கு என்ன வேலை?


அவருக்குள் ஞானம் அறிவு என்னும்
பொக்கிஷங்கள் அடங்கியிருக்கும்போது
தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம்
சரீரப்பிரகாரமாக அவருக்குள்
வாசமாயிருக்கும்போது
அந்த ஒருவனுக்கு என்ன வேலை?

அவருக்குள் நாம்
பரிபூரணமுள்ளவர்களாய்
இருக்கும்போது
நமக்கும் அவருக்கும்
இடையே புகுந்து குழப்பத்தை
உண்டுபண்ண நாம் ஏன்
அந்த ஒருவனுக்கு
இடமளிக்கவேண்டும்?


சங்கீதக்காரனான
தாவீது ராஜா சொல்லுகிறார்

கர்த்தரை எப்பொழுதும்
எனக்கு முன்பாக
வைத்திருக்கிறேன்;
அவர் என் வலதுபாரிசத்தில்

இருக்கிறபடியால் நான்
அசைக்கப்படுவதில்லை
(சங்கீதம் 16:8)


அந்த ஒருவனை
அனுமதிக்காதீர்கள் என்றால்
யார் அந்த ஒருவன்?


உங்களை வஞ்சிக்கிறவன்!

எப்படி வஞ்சிப்பான்?

நயவசனிப்பினாலே
வஞ்சிப்பான். 


அப்படிப்பட்டவனுக்கு
எச்சரிக்கையாய்
இருக்க வேண்டும்.


நம்முடைய கிறிஸ்தவ
மார்க்கத்தில் அநேக வேளைகளில்

இப்படிப்பட்டவர்களுக்கு 
வரவேற்பு அளிக்கப்படுவது

வேதனையளிக்கிறது.

நயவசனிப்பினால்
தேவ ஜனங்களை

வஞ்சிக்கிறவர்களை
இன்றைய தலைவர்களில்
அநேகர் முன்னிலைப்படுத்துகிறார்கள்.


பவுல் தெளிவாக வலியுறுத்துகிறார்
ஒருவனும் உங்களை வஞ்சியாதபடி
எச்சரிக்கையாய் இருங்கள் என்று.

வஞ்சிக்கிறவர்கள் இன்றைக்கு
உலகமெங்கிலும் இருக்கிறார்கள்.
நாம்தான் எச்சரிக்கையாய்
இருக்கவேண்டும்


வஞ்சிக்கிறவர்களை
வாஞ்சிக்கிறவர்கள்
இருக்கிறார்கள்.


அவர்களை நாம்தான்
இனம்கண்டுகொள்ளவேண்டும்.

அவர்களைப் பின்பற்றக் கூடாது.
அப்படி பின்பற்றினால்

அவர்கள் தங்களுடைய கருத்துக்களை
முன்வைத்து சத்தியத்தைப்
பின்வைத்து விடுவார்கள்.

சத்தியத்திற்குப் பதிலாக
அசத்தியத்தை புகுத்திவிடுவார்கள்.


சத்தியத்திற்கு செவியை விலக்கி
கட்டுக்கதைகளுக்கு
செவிசாய்க்கச் செய்துவிடுவார்கள்.
தேவ செய்தியைக் கொடுக்கிற
வேளையில் கட்டுக்கதைகளை
கட்டவிழ்த்துவிடுவார்கள்

சினிமா பாடல்களை
மேற்கோள் காட்டி
பாடிக்காட்டி
ஆடிக்காட்டி
பரிசுத்தரின் பலிபீடத்தை

தீட்டுப்படுத்துகிறார்கள்

இப்படிப்பட்ட நயவசனிப்பு

பிரசங்கியார்களுக்கு
எச்சரிக்கையாய்
இருக்கவேண்டும் என்று
பவுல் முதலாம் நூற்றாண்டிலேயே

வலியுறுத்துவதை நாம்
கவனிக்கவேண்டும்.


சர்ப்பமானது தன்னுடைய
தந்திரத்தினாலே ஏவாளை
வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும்

கிறிஸ்துவைப்பற்றிய
உண்மையினின்று விலகும்படி

கெடுக்கப்படுமோவென்று
பயந்திருக்கிறேன். (2 Corin. 11:3)

பவுலைப் போல இப்படிப்பட்ட  
பயம் நமக்கும் வேண்டும்.

உங்கள் Sincere And Pure Devotion ல்
கை வைக்க யாருக்கும்

அனுமதிகொடுக்காதீர்கள்.
எப்படி நம் வீட்டிற்குள்
சர்ப்பம் வந்துவிடாதபடி கவனமாய்
இருக்கிறோமோ

அதுபோல மனம்
என்னும் வீட்டுக்குள்
வஞ்சிக்கும் சர்ப்பம்
எந்த ரூபத்திலும்
நுழைந்துவிடாதபடி
நாம்தான் எச்சரிக்கையாய்

இருக்கவேண்டும்.

கெட்ட சிந்தையுள்ளவர்களும்
சத்தியமில்லாதவர்களும்
தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று
எண்ணுகிறவர்களுமாயிருக்கிற
மனுஷர்களால் உண்டாகும்
மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்;
இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு.
(1 தீமோத்தேயு 6:5)


விட்டுவிலக வேண்டியவைகளை
தொட்டுத் தொடர்வது  ஆபத்தானது.


நீயோ, தேவனுடைய மனுஷனே
|இவைகளை விட்டோடி, நீதியையும்
தேவபக்தியையும் விசுவாசத்தையும்
அன்பையும் பொறுமையையும்
சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.

(1 தீமோத்தேயு 6:11)

பாஸ்டர்
ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் B.Com., M.Div.,
ஆறுதல் FM வானொலி செய்தியாளர்

நல்லாசான்” சர்வ தேச விருது
மலேசியா 2021


Share this page with friends