ஆசரிப்புக் கூடாரத்துக்கு ஏன் அத்தனை துல்லியமான விவரங்களை தேவன் கொடுத்தார்?

Share this page with friends

ஆசரிப்புக் கூடாரத்துக்கு ஏன் அத்தனை துல்லியமான விவரங்களை தேவன் கொடுத்தார்?

“… உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின் படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிரு என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார்.” – எபிரெயர் 8:5.

வனாந்தரத்தில் ஒரு ஆசாரிப்புக்கூடாரம் கட்டும்படி தேவன் ஜனங்களுக்குக் கட்டளையிட்டு, அதற்குண்டான சகல விவரங்களையும் அவரே கட்டளையிட்டார். ஒவ்வொரு பெரிய காரியம் முதல், மிகச் சிறிய விஷயம் வரை, அவர் கற்பித்தப்படியே துல்லியமாக செய்யப்பட வேண்டியிருந்தது. இதற்கான காரணம், ஆசரிப்புக் கூடாரமும், அதன் பணிகளும், பிரதானமானதும், அதிக முக்கியத்துவம் வாய்ந்ததுமான காரியங்களான, யுகங்களைக் கடந்த தெய்வீகத் திட்டத்தைப் பிரதிபலிக்கின்றது.

நம் சரீரம் ஆலயம் அல்லவா? நம் வாழ்க்கை அதன் பிரதிபலிப்பு அல்லவா? மோசேயின் வழியாய் ஆசரிப்புக்கூடாரத்தைத் திட்டம் பண்ணிய தேவன், தம் குமாரன்மூலமாக நம் வாழ்வை ஒழுங்குபடுத்தவும், நம்மில் மகிமையோடு தங்கவும் விரும்புகிறார். *நம்மைப் பற்றிய தேவனுடைய திட்டங்களும் யுகங்களைக் கடந்தவை. உண்மைதான்.

நிழலான ஆசரிப்புக்கூடாரத்தைப் போல, ஆண்டவராகிய இயேசுவின் வாழ்க்கை நிஜமாக இருந்தது.

இயேசுவை இரட்சகராகக் கொண்ட நம் வாழ்க்கையும் துல்லியமாக அளவீடு செய்யப்பட்ட தூய்மையுள்ள வாழ்க்கையாக, தேவனுடைய வார்த்தையின்படி திட்டம்பண்ணப்பட்டு இருக்கவேண்டும்!

ஆசரிப்புக்கூடாரப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் எல்லாம் அழிவுள்ளவை. அவைகள் தேவவார்த்தைக்கு கட்டுப்பட்டு நின்றனவே. மாம்சமும் சதையுமான, உணர்வுள்ள, தேவசாயலில் படைக்கப்பட்ட, நாம் எவ்வளவு உறுதியாய் நிற்கவேண்டும்?

நாம் அவரோடு வாழப்போவது யுகங்களைத் தாண்டி அல்லவா? ஆகவே இவ்வுலகச் சுகம் நம்மை சிறைபிடித்து விடக்கூடாதபடி மிகுந்த கவனம் தேவை! ஆமென்!


Share this page with friends