ஏன் இயேசு கிறுஸ்துவால் தான் பிறந்து வளர்ந்த ஊரில் முழுமையாக அற்புதம் செய்ய முடியவில்லை?

Share this page with friends

இன்று நாம் இயேசு கிறிஸ்துவின் வல்லமை மற்றும் அவர் அற்புதம் செய்பவர் என்று நம்பி விசிவாசிக்கும் நிலையில் சில இடங்களில் ஏன் அவரால் அற்புதம் செய்ய முடிவதில்லை என்கிற காரணங்களை தொடர்ந்து கவனிப்போம்.

A. அந்த ஊரார் இயேசு கிறிஸ்துவை அற்பமாக எண்ணினார்கள்.

இவன் தச்சன் மகன் அல்லவா? இவனை எங்களுக்கு தெரியாதா என்கிற கோணத்தில் இயேசு கிறிஸ்துவின் தெய்வீக தன்மையை அற்பமாக எண்ணினார்கள். தங்கள் ஊரில் உள்ள ஒரு சாதாரண நபர் போன்று அவரை treat பண்ணினார்கள். இயேசு உதாசீசனப்படுத்தப் பட்டார். எல்லாரையும் போன்று ஒருவராக இவரை கருதினார்கள். இப்படி இன்றும் இயேசுவை அற்பமாக எண்ணி, விவாதங்கள் செய்து, குறைத்து மதிப்பீடு செய்கிற இடத்தில் அவருக்கு கிரியை செய்ய முடியாது. அவர் தச்சனின் மகனாக வந்தது எப்படி உண்மையோ! அதைவிட அவர் பிதாவினிடத்தில் இருந்து வந்தவர் அவருக்குள் சகல கர்த்தத்துவம் அடங்கி இருக்கிறது என்பதை அவர்கள் அறிந்து கொள்ளாதது தான் அவரால் அங்கு கிரியை செய்ய முடிய வில்லை. அவரிடம் தங்களை தாழ்த்தி கிருபை பெரும் நோக்கில் அவர்கள் செயல்பட வில்லை. அது இன்றும் சாத்தியம் தான். இயேசு யார் என்று அறிந்து தங்களை தாழ்த்தி கிருபையின் படி அவரை தேடாமல் அவரை மட்டம் தட்டி யாரும் அற்புதம் பெற்று கொள்ள முடியாது.

B. அவர் அந்த ஊரில் கனயீனப்படுத்தப் பட்டார்.

அவர் அற்பமாக அங்கு எண்ணப் பட்டதும் அன்றி, பரியாசம் செய்யப்பட்டார். இவன் சகோதரர்கள் இங்கு தானே இருக்கிறார்கள். இவன் என்ன பெரிய ஆளா? என்கிற கண்ணோட்டத்தில் அவருக்கு கொடுக்க வேண்டிய மகிமையை கொடுக்காமல், அவரை பாரியாசம் செய்தார்கள். அவர் ஆராதனைக்கு உரியவர் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வில்லை. கர்த்தருடைய வசனம் சொல்கிறது குமாரனாகிய கிறிஸ்துவை கனம் பண்ணினால் பிதாவானவர் அவனை கனம் பண்ணுவார். கிறிஸ்துவுக்கு கொடுக்க வேண்டிய மகிமையும் கணமும் அவருக்கு செலுத்த வேண்டும் ஏனெனில் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாராதவர். பலவான்களின் புத்திரரே கர்த்தருக்கு மகிமையை கர்த்தருக்கே மகிமையை செலுத்துங்கள் என்று வசனம் சொல்கிறது.

C. அவரை குறித்து அங்கு இடறல் அடைந்து தடுமாறினார்கள்.

இயேசு கிறிஸ்துவை அற்பமாக எண்ணினது மட்டுமன்றி, அவரை கணயீன படுத்தினதும் அன்றி அவரை குறித்து இடரல் அடைந்தார்கள். ஒரு உறுதி அற்றவர்கள் போன்று அவரை குறித்து பல விமர்சனங்கள் செய்து, பரீட்ச்சை பார்த்து இடறி போனார்கள். இன்று இயேசு கிறிஸ்துவை குறித்து அநேக இடங்களில் ஜனம் இடறி போகின்றது. அவரை குறித்து சோதித்து, டெஸ்ட் செய்து விழுந்து போகிறார்கள். அவரை குறித்து இடரல் அடையாதவர்கள் பாக்கியவான்கள்.

D. அவரை அந்த ஊரார் விசுவாசிக்க வில்லை.

கடைசியாக சொல்லப்பட்டுள்ளது, அவரை சந்தேகமடைந்த தார்கள். அவரது வல்லமையை அவர்கள் ஏற்று கொள்ளவில்லை, சந்தேக கண்ணோடு பார்த்தார்கள். அவரால் சுகம் உண்டு என்பதை அங்கீகரிக்க வில்லை. அதுவே இன்றும் நடக்கிறது. யாரெல்லாம் அவரை விசுவாசிக்கிறேன் என்று சொல்லி அவரது வல்லமையை நம்பி அவரிடம் தைரியமாக வருகிறார்களோ! அங்கு நிச்சயம் தேவ மகிமை வெளிப்படும்.

கர்த்தரின் கிருபையில் பெலபட்டு, அவரின் சத்துவத்தில் நின்று, அவரது தெய்வீகத்தின் பரீபுரணத்தை அங்கீகரித்து, அவரது வல்லமையை யார் யாரெல்லாம் நம்பி விசுவாசிக்கிறார்களோ அந்த இடத்தில் நிச்சயம் அற்புதம் நடக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஏனெனில் அவரை நம்புகிற மனுசன் பாக்கியவான்.

செலின்.


Share this page with friends