கருத்தப்பிள்ளையூர் மறுபடியும் கர்த்தர் பிள்ளை ஊராக அறிவிக்கப்படுமா?

தென்காசி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள அழகிய எழில் நிறைந்த கிராமம் தான் கருத்தப்பிள்ளையூர். இக்கிராமத்திற்கு மேற்கே கடனா அணை, கிழக்கே குளங்கள், தெற்கே பாபநாசம் அகஸ்தியர் அருவி, வடக்கே கருணை ஆறு என திரும்பிய பக்கமெல்லாம் நீர் நிலைகளை கொண்ட இந்த அழகிய கிறிஸ்தவ கிராமத்தின் பழைய பெயர் கர்த்தர் பிள்ளை ஊர்.
ஆம் இந்த கிராம மக்கள் கடந்த 19-ம் நூற்றாண்டின் துவக்க காலம் முதல் கிறிஸ்தவ விசுவாசத்தில் வேரூன்றி கர்த்தரின் பிள்ளைகளாக வாழ்ந்து வருவதால் இப்பெயர் வழங்கப்பட்டது. சர்ச் ஆப் காட் ஸ்தாபனம் உருவாக்க காரணமாய் இருந்ததும் இந்த கிராமமே..
கர்த்தர் பிள்ளை ஊர் என்று அழைக்கப்பட்ட இக்கிராமம் இன்று மருவி கருத்தப்பிள்ளையூராக மாறியுள்ளது. உச்சரிப்பு பிழையினால் இன்றைய தலைமுறை தவறு செய்திருக்கலாம். ஆனால் அரசு பதிவேடுகளிலும் பெயர் மாற்றப்படுகிறதே இதற்கான காரணம் என்ன? என கிராமத்தை சார்ந்த திரு. ராஜய்யா என்பவர் தனது வேதனையை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அர்த்தமுள்ள பெயர்கள் இப்படி அர்த்தமற்று மாற்றப்படுவதை நாம் கண்டும் காணாதவர் போல இருக்க முடியாது. ஊர் மக்களின் கோரிக்கையை அரசு விரைவில் பரிசீலித்து கருத்தப்பிள்ளையூரை மீண்டும் கர்த்தர் பிள்ளை ஊராக அறிவிக்குமா?
வீடியோவை காணுங்கள்..