சிலுவையில் இருந்து கற்றுக்கொள்ளும் ஞானம்

Share this page with friends

நீதியின் நிமித்தம், கிறிஸ்துவின் நிமித்தம் பாடுகள் அவமானங்கள் நமக்கு முன்பாக உண்டு என்பதை அறிந்து அவைகளை சந்திக்க ஸ்தோத்திரத்தோடும், ஜெபத்தோடும், ஒவ்வொரு நாளும் ஆயத்தம் ஆகி கிறிஸ்துவின் வல்லமையை பெற்று கொள்ள வேண்டும்.

அநியாயத்தை எதிர்த்து மாம்சத்தோடு போராடாமல், சகிக்க வேண்டும்.

பாடுகளின் மத்தியில் நான் யாரென்று நீருபிக்க முயற்ச்சி எடுக்க கூடாது.

பாடுகள், அவமானங்கள் மற்றும் பரியாசங்களை உள்வாங்கி ஏற்று கொள்ள வேண்டும்.

எதிர் கேள்விகளுக்கு எல்லாம் பதில் தாராமல், வாய் திறவாமல் இருந்து கொண்டு, நாம் யார் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

நமக்கு என்று பாடுகள் குறித்த காலத்திற்கு என்று வைக்கப்பட்டுள்ளது, அதை நாம் தான் சுமக்க வேண்டும், பிறரால் அதிக நேரம் தாங்கி பிடிக்க முடியாது என்பதில் தெளிவு வேண்டும்.

பாடுகளின் மத்தியிலும் நம்மவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். அவர்களது கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.

நிலவரம் தெரியாமல் கூட்டத்தோடு கூட்டமாக, எதார்த்தம் புரியாமல் தாங்கள் என்ன செய்கின்றோம், யாரை பரியாசம் செய்கின்றோம், யாரை துன்புருத்துகிரோம் என்று அறியாமல் நடந்து கொண்டவர்களை மன்னிக்க வேண்டும்.

பாடுகளின் மத்தியில் உணர்ச்சிவசப்பட்டு, எதிர்வினையாக செயல்பட்டு, அந்த பாடுகளை சகிக்கும் வலிமையை இழந்து போக கூடாது. அவர் மரணபரியந்தம் தன்னை விட்டு கொடுத்தார்.

எத்தனை காயங்கள், எத்தனை பாடுகள், எத்தனை வழிகள் வாழ்வில் வந்தாலும் அவைகள் குணமாகும், தளும்புகளாக மாறும், அவைகள் ஒரு நாள் மறுரூபமாக மாறும் என்பதை அறிந்து கொண்டு, கடந்த கால கசப்பான நிகழ்வுகளை புதைத்து போட கற்று கொள்ள வேண்டும். ஏனெனில் தழும்புகள் குணமாக்கும் சக்தி கொண்டவை.

சிலுவையின் அசீர்வாதத்தால் நம்மை நிறப்புவராக!

செலின்

மக்கள் அதிகம் வாசித்தவை:

உங்களுடைய கவணில் கவனம் வையுங்கள்! வித்யா'வின் விண் பார்வை
கைவிடாத தேவன்
2021 ஆம் ஆண்டிலிருந்து தீர்க்கதரிசனம் என்ற பெயரில் சபைகளில் எதுவும் சொல்ல மாட்டார்கள்
ஜாதகம் உண்மையா? அவர்கள் கூறுவது நடந்து கொண்டிருக்கிறதே அவர்கள் எவ்வாறு கணக்கிடுகிறார்கள்? விளக்கவும்
யார் செழிப்பார்கள்?
கிறிஸ்தவர்களின் உபவாசம் பற்றிய அறிவியல் பூர்வமான உண்மைகள் கூறுகிறார் மருத்துவர் சுந்தர் பரமார்த்தலிங...
பாவம் என்றால் என்ன ?
வீட்டு விநாயகருக்கு 'கிறிஸ்துமஸ் தாத்தா' வேஷம். சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படத்தை நீக்கி பிரசன்னா ப...
அதிகாரிகள் செய்யும் பாவங்களுக்காக சிலுவை சுமக்க நீதிமன்றம் இயேசு கிறிஸ்து இல்லை - உயா்நீதிமன்றம் கரு...
பிரசங்க வேந்தன் வேதத்தைக்குறித்துச் சொன்னவை.

Share this page with friends