புத்தியுள்ள ஆராதனை மற்றும் பக்தியுள்ள ஆராதனை.

Share this page with friends

ஆராதனை, இசை, பாடல், இன்று எல்லோராலும் விரும்பப்படும் ஒரு வார்த்தை. இசைக்கு மயங்காதவர் எவருமில்லை.

ஆனால் எந்த ஆராதனை உண்மையுள்ளது? எந்த ஆராதனை சத்தியமுள்ளது? எந்த ஆராதனை கிருபையுள்ளது? எந்த ஆராதனையை கர்த்தர் விரும்புகிறார் என்பதை அறிய அநேக முறை நாம் தவறி விட்டோம்.

நமது சிறுவதில் ஒரு கொட்டு, சிங்கி, side drum, கை திருக்கு, டாமரின், அக்காடின், போன்ற கைகளால் பயன்படுத்த பட்ட கருவிகளை ஆரதனைக்கு உதவியாக, அதே நேரத்தில் நேர்த்தியாக, வாசித்து, ஒழுக்கமாக நின்று தேவ சமூகத்தோடு, பயப்பக்தியோடு ஆராதனை நடத்தி வந்ததை ஒப்பிட்டு பார்க்கும் போது இன்றைய கால கட்டத்தில் மாடர்ன் என்று சொல்லி சற்று நெருடலான ஆரதனைகளை பார்க்க வேண்டியுள்ளது. இப்படிபட்ட அராதனைகளால் கொஞ்சம் கொஞ்சமாக தேவ பக்தியின் சாராம்சத்தை விட்டு விலகி போய் இருக்கிறோம் என்பதில் எந்த ஐயமில்லை.

வேதத்தின் அடிப்படையில் சற்று சிந்திக்க கர்த்தர் கிருபை தருவாராக!

A. ஆராதனையில் உணர்ச்சிகளை தாண்டி சத்தியம் இருக்க வேண்டும்.

பிசாசு ஆராதனைக்கு ஏற்படுத்த பட்டவன், இசைகளோடு பின்னி பிணைந்து இருந்தவன் அவனே, விழுந்து போனவன் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். எனவே ஆராதனையில் விழுந்து போகவும் வாய்ப்பு உண்டு. சத்தியம் பேசுவதற்கு தான் அன்று ஆராதனைகள் நடந்தது. இயேசு கிறிஸ்து சத்தியமும் ஜீவனும் ஆவியும் உண்மையுமானவர். இன்று சத்திய வசனம் பேசப்படாத எந்தனையோ ஆராதனைகள் நடந்து கொண்டு இருக்கிறது. ஆராதனைக்கு உரியவர் தேவன் ஒருவரே என்பது தான் சத்தியம் மற்றும் அவரே தான் சத்தியம், அவர் தனது மகிமையை யாருக்கும் கொடேன் என்று சத்திய வசனத்தில் சொல்கிறார்.

இயேசு இவ்விதமான உணர்ச்சிகளில் தூண்டப்படும் போது சத்திய வசனத்தால் வெற்றி பெற்றார். நமது மாம்சத்தை தீனி போட்டு, நமது சுயத்தை பெரிதாக காட்டி, உலக மேன்மையை காட்டுவதற்கு எந்த ஆராதனைகள் கூட்ட படுகிறதோ அங்கு உணர்ச்சிகளை தான் நாம் பார்க்க முடியும். நமது ஆராதனை பரிசுத்த ஆவியின் அகதூண்டுதல் மூலம் வர வேண்டும்.

வெறும் ஆட்டம், பாட்டு, சரீர நகர்வுகளை மட்டும் சார்ந்தது அல்ல ஆராதனை. அன்று பாஸ்டர் ஜீவானந்தம், பாஸ்டர், ஜஸ்டின் பிரபாகரன், சிஸ்டர் சாரால் நவ்ரோஜி, சகோ. நடராஜ முதலியார், பாஸ்டர் பாழயங்கோட்டை ராஜேந்திரன், பாஸ்டர் கோடம்பாக்கம் சார்லஸ் ஆரோன் மற்றும் அய்யா டிஜிஎஸ் தினகரன் போன்றவர்கள் பெரும்பாலும் கைகளில் அன்றைய காலத்தில் இருந்த சில இலகுவான இசை கருவிகளை பிடித்து நின்று கொண்டு தான் பாடல்கள் பாடி ஆராதனை நடத்தினார்கள். அவைகளும் சில உணர்வுகளை பிரதிபலித்தது. ஆனால் அவைகளில் நேர்த்தி இருந்தது, ஆறுதல் இருந்தது, ஒரு இனம் புரியாத சந்தோசம் இருந்தது, உள்ளம் உடைதல் இருந்தது, எனெனில் அவைகள் மாம்சத்திற்கு அப்பாற்பட்டு பரிசுத்த ஆவியின் உள்ளுணர்வால் தூண்டப்பட்டு இருதயத்தில் இருந்து வந்த ஆராதனைகள். எனெனில் அவர்கள் பாடல்கள் கிறிஸ்துவின் பாடுகளை அனுபவித்து எழுதிய பாடல்கள். Trp rate க்க்காக எழுத பட்டவைக்கள் அல்ல. அன்று மக்கள் பாடுகள், வேதனைகளோடு வந்து ஆராதித்த போது அந்த கிறிஸ்துவின் சத்திய வார்த்தைகள் அவர்கள் இருதயத்தை துளைத்து அதினால் ஏற்பட்ட உள்ளம் உடைந்த அனுபவங்கள் இன்று கானல் நீராக தான் இருக்கிறது.

அன்று பாடல் பாடி ஆராதனை நடத்துகிறவர்கள் அவ்விதமான சத்தியத்தை வெளிபடுத்த தவறினால் உடனடியாகக் மேடைகளில் கடிந்து கொள்ள படுவார்கள். மேடைகளில் அவமானம் செய்யப்பட்டு உட்கார வைக்க படுவார்கள். அதினால் அவர்கள் அதற்காக வருத்த படுவதில்லை. மாறாக தங்களை திருத்தி சத்தியம் என்னில் வெளிப்படவில்லையே என்று தங்களை தாழ்த்தி கிறிஸ்துவை மகிமை படுத்தினார்கள். தங்கள் சுயத்தை விட கிறிஸ்துவின் மகிமை பெரிதாக அன்று பார்க்க பட்டது. இன்று நாம் காயப்பட கூடாது என்று பார்க்கிறோமே தவிர கிறிஸ்துவின் சத்திய மார்க்கம் மற்றும் கிறிஸ்து என்னில் தூசிக்க படுகிறதா! படுகிரார! என்கிற காரியத்தை பார்க்க நாம் தவறி விடுகிறோம். அன்றைய நாட்களில் பிரசங்கியாருஉடன் பக்க பலமாக சேர்ந்து நின்று சத்தியம் பேசவே பாடல் ஆராதனை ஏற்படுத்த பட்டது. ஆனால் இன்று…..எனவே சத்திய மில்லாத ஆராதனை மனுஷ சுயத்தில் தான் முடிந்து விடும்…தேவ மகிமையை தேடும் ஆராதனை ஒருபோதும் தன் சுய அவமானங்களை பெரிதாக எண்ணுவதில்லை…வசனம் இல்லாத ஆராதனையும் சத்தியம் இல்லாத ஆராதனையும் உடற்பயிற்சி கூடங்களில் exercise செய்யும் ஒரு விளையாட்டு போன்றதாகும். சரீர முயற்சி அற்ப பிரயோஜனம் உள்ளது என்று நாம் வாசிக்கிறோம். சத்திய ஆராதனை மாம்ஸம், சுயம், உலக மேன்மை போன்ற உணர்ச்சிகளை தாண்டி இருதயத்தின் உண்மை மற்றும் ஆவி நிலையில் இருந்து வெளிப்படும் ஒரு மெய்யான ஆராதனை தான். எனெனில் பிசாசும் ஒளியின் தூதணின் வேசத்தை தரித்து கொள்வனாம் எனவே சத்தியத்தை அறிவிக்கும் ஆராதனைகள் பெருகட்டும் அதுவே புத்தியுள்ள ஆராதனை மற்றும் சத்திய ஆராதனை. சத்தியத்தை அறிகிற அறிவு தான் பூரண விடுதலையை கொண்டு வரும். நான் சிறுகவும் கிறிஸ்து பெருகவும் அறிவிக்க படவும் வேண்டும் அதுவே சத்திய ஆராதனையில் உள்ள அடிப்படை உண்மை. கிருபையும் சத்தியமும் சேர்ந்து இருதயத்தில் இருந்து வெளிப்படும் ஆராதனையில் தான் மெய்யான உணர்வான சந்தோசமும் ஆறுதலும் உண்டாகும்.

B. ஆராதனை ஒரு பொழுதுபோக்கு அல்ல அது தேவபக்தியின் ஆளத்துவ செயல்பாடு.

ஆராதனையில் நமது சந்தோசம், நமது கொண்டாட்டம், நமது திருப்தி போன்றவற்றை தாண்டி தேவ பக்தி போன்ற குணநலன்கள் வெளிப்பட வேண்டும். தேவன் பெரியவர், அவர் சர்வ வல்லவர், அவர் மகத்துவமானவர், செயல்களில் பயங்கரமானவர், நித்யமானவர் என்கிற கண்ணோட்டம் மிகவும் அவசியம்.

தேவ பக்தியின் வேசம் அல்ல தேவபக்தியின் வெளிப்பாடே ஆராதனை. கர்த்தருக்கு பயப்படும் ஆராதனையில் ஞானம் விளங்கும். அவர் பயபக்திக்கு உரிய தேவன். கர்த்தருக்கு பயப்படுகிற பயம், கர்த்தருக்கு மரியாதை கனம் கொடுத்து ஆராதனை செய்யும் இடத்தில் அவர் வருவார். கர்த்தர் கிருபை உள்ளவர் அதினால் தான் நாம் கிறிஸ்துவில் தைரியமாக ஆரதிக்கிரோம். ஆனால் அதே நேரத்தில் அவர் நீதி உள்ளவர் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். அவரது பிரமாணங்கள் நமக்கு கற்று தந்த வழிகளில் ஆராதனை செய்ய வெண்டும். ஆராதனையில் கிருபை உள்ள வார்த்தைகள் வெளிப்படும் போது நீதியுள்ள வார்த்தைகளும் அறிவிக்க பட வேண்டும். அப்படி என்றால் ஒரு கொண்டாட்ட மனநிலையில் உள்ள ஆரதனைக்கும் கேளிக்கை விடுதிக்கும் என்ன வித்தியாசம்! தாவீதின் சந்தோசம் உடன்படிக்கை பெட்டியை மீட்டு கொண்டு வர தான் எடுத்த முயற்சியின் தோல்வியில் இருந்து கற்று கொண்ட பாடத்தின் நிமித்தம் பின்னர் பிரமாணத்தின் படி அதை நேர்த்தியாக கொண்டு வர முடிந்தது என்றும் கர்த்தர் கிருபை உள்ளவர் என்றுm அறிவிக்க வெளிப்படுத்தின சந்தோச வெளிப்பாடே தான். அதற்கு அவன் ஈடாக ஒருவனை இழந்து விட்டான் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். நீதி நியாயத்தின் படி நாம் நடக்க வேண்டும் என்பதிலும் கர்த்தர் உறுதியாக இருக்கிறார் என்பதும் நாம் அறிய வேண்டியதே.

மேடைகளில் கண்ணியம், ஆலோசனைகளை ஏற்று கொள்ளும் பக்குவம், கணத்துற்கு உரிய வார்த்தைகள், பயபக்தியை தூண்டும் வார்த்தைகள், தாழ்மையின் செயல்பாடுகள் நல்ல ஆராதனையில் இருக்கும், நாம் பிள்ளைகள் தான் ஆனால் வேசியின் பிள்ளைகள் அல்லவே! கடிந்து கொள்ளுதல் வரும் போது அதை ஏற்று கொள்ளுதல் ஒரு நல்ல பிள்ளையின் அடையாளம்.

மிதமிஞ்சி பேசுதல், திறமையின் அடிப்படையில் சிந்தித்தல், மக்கள் அங்கீகாரத்தை மையபடுத்தி செயல்படுதல், சகிக்கும் தன்மை இல்லாமை போன்றவை இருக்கும் இடத்தில் தேவ பக்தி இருக்க சாத்தியம் இல்லை. கர்த்தர் இருதயத்தையும் பார்ப்பார் நமது முகம் மற்றும் பாவனைகளையும் பார்ப்பார். போதும் என்கிற எண்ணமே தேவ பக்தியின் இரகசியம். கர்த்தரின் பக்தியை கொண்டவர்கள் எப்போதும் கர்த்தரின் பார்வைக்கு முன் உண்மையாக நடந்து இருதயத்தில் அவர் மேல் வைக்கும் நம்பிக்கையில் பெருகுவார்கள். அவர்கள் என்ன புயல் வந்தாலும், அவமானம் வந்தாலும் சோர்ந்து போவதில்லை. காரணம் அவர்கள் எண்ணமே கர்த்தர் பெரியவர் அவர் மிகவும் துதிக்க படதக்கவர் என்கிற நம்பிக்கையில் உறுதியாக இருக்கும். அதே நம்பிக்கை, பயபக்தி, விசுவாசம் போன்றவற்றை தூண்டி விடும் வேலை தான் ஆராதனையின் சாராம்சம். அதினால் தான் சத்திய வசனம் நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நம்மை தாழ்த்தி பணிந்து குனிந்து முழங்கால்படியிட்டு ஆராதிப்போம் வாருங்கள் என்று அழைக்கிறது எனெனில் அவர் சர்வ வல்லவர்.

C. உலக வேஷத்தை தாண்டி பரிசுத்த அலங்காரமே ஆராதனையின் அடித்தளம்.

தேவன் பரிசுத்தர் ஆகையால் நாமும் பரிசுத்தமாக இருக்க வேண்டும். பரிசுத்த அலங்காரம் இல்லாமல் என்ன அலங்காரம் செய்தாலும் அவைகளில் கவர்ச்சி இருக்கலாம் ஆனால் பரிசுத்த ஆவியின் செயல்பாடு இருக்க வாய்ப்பு இல்லை. Perfect, excellent ஆக இருக்க practice க்கு கொடுக்கும் முக்கியத்துவம் இன்று கர்த்தரின் சமூகத்தில் பரிசுத்தம் அடைய கொடுப்பதில்லை. அன்றைய பரிசுத்தவான்கள் கர்த்தரின் சமூகத்தில் தங்களை தாழ்த்தி விட்டு கொடுத்து பரிசுத்ததில் பெருகின போதுதான் அநேக ராகங்கள் மற்றும் பாடல்கள் பெற்று அதை கர்த்தரின் நாம மகிமை வெளிப்பட பாடினார்கள். அப்படி படவர்கள் இன்று எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம் ஆனால் பெரும்பாலும் இன்றைய so called ஆராதனை வீரர்கள் உலகின் திறமை வாய்ந்த இசைஞானிகள் துணையோடு தான் உலக மெட்டு வாசனை பெருக பாடல்கள் இயற்றி அவைகளை viewers, like, share மற்றும் subscribe ஆப்ஷன் போன்றவற்றில் திருப்தி பட்டு இத்தனை பேர் பார்த்தார்கள், கேட்டார்கள் என்று சொல்வதில் பெருமை கொள்கிறோம். ஆனால் அன்றைய பாடல்கள் நோக்கமே பரிசுத்தர் அறியபடவெண்டும் மற்றும் பரிசுத்தம் பெருக வெண்டும் என்பதே. நமக்கு தெரிந்து அநேக பரிசுத்தவான்கள் இரச்சிக்கக் படாத நபர்களின் துணை இல்லாத பரிசுத்த பாடல்களை எந்த கலப்படம் இன்றி கொடுத்து அதில் உறுதியாக இருந்தார்கள். ஆனால் இன்று பிரபலம், திறமை மற்றும் கவர்ச்சி போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பரிசுத்தத்தை இழந்து நிற்கிறோம். உலகத்தோடு அடையாளம் செய்வதில் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். தேவன் விரும்பும் இருதயம், பரிசுத்தம் இல்லையே, அவரை போல மாற வில்லையே என்று நொறுங்கி, உடைந்த உள்ளத்தோடு அவரது பரிசுத்தத்தில் பூரணராக விரும்பும் நோக்கத்தில் தான் இருக்கிறது. அதை தான் பரிசுத்த ஆவியானவர் விரும்பி இன்று ஆராதனையில் எதிர் பார்க்கிறார் எனெனில் அவர் பரிசுத்தர் மற்றும் பாவத்தையும் நீதியையும், உலகத்தையும் குறித்து கண்டித்து உணர்த்தி நம்மை புத்தி உள்ள ஆராதனை செய்ய வைக்கிறார். பரவசம் பரிசுத்ததில் இருக்க வேண்டுமே தவிர இசைக்கருவிகள், மேடை அலங்கரிப்பு, செட் அப், trp rate, அதிக viewers, உலக அடையாளங்கள் மற்றும் திரள் கூட்டத்தில் அல்ல.

D. சுய திருப்தி/ லாபம் மற்றும் கடமையை தாண்டி ஒப்புகொடுத்தல் மற்றும் அற்பணிப்பில் ஆராதிக்க வேணடும்.

இன்றைக்கு அநேக பாடல்கள், ஆராதனைகள் மற்றும் கிறிஸ்தவ இசைதகடுகள் விளம்பர மோகம், வியாபார நோக்கம், சுய தம்பட்டம் மற்றும் தங்கள் ஊழியத்தை மேம்படுத்தும் நோக்கில் தான் காணப்படுகின்றது. சாட்சிகள் கூட தங்களை மையப்படுத்தியே வருகின்றது. பிறர் எளிதில் கவரப்பட வேண்டும். பிறர் எளிதில் வாங்க வேண்டும். ஹிட் ஆக வேண்டும், அதின் மூலம் ஊழிய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று எல்லாம் தங்களை சார்ந்த நிலையில் தான் இருக்கின்றது. தாங்கள் இருக்கிறோம் என்று காட்டுவதற்கு கூட அநேக வெளியீடுகள் வருகின்றது. சபை பக்தி விருத்தி மற்றும் சுவிசேஷ தாகம் ஏற்படுத்த ஒரு அற்பணிப்பு, மனம் திரும்புதல், ஜீவ பலியாக ஒப்புகொடுத்த சாட்சிகள் போன்ற காரியங்கள் அரிதான நிலையில் இருகின்றது. உலக ஆங்கீகாரத்திற்கு பின்னால் ஓடும் நாம் தேவ ராஜீய ஆங்கீகாரம் கிடைக்க தவறி விடுகிறோம்.

Missionary தரிசனம், கிறிஸ்துவின் மேல் உள்ள வாஞ்சை, பரிசுத்த ஆவியின் மேல் உள்ள தாகம், பாவ மோகம் விட்டு பரிசுத்தம் அடைய வாஞ்சையுள்ள அர்ப்பணிப்பு எப்பொழுது குறைகிறதோ அங்கு தான் புத்தியுள்ள ஆராதனை ஆட்டம் காண்கின்றது.

சர்வவல்லவரை சந்தித்த ஏசாயா, பவுல் மற்றும் சீஷர்கள் தங்களுக்குள் ஒரு மாற்றத்தை பெற்று பின்னர் பிறருக்கு பயன்பட்டனர். இடைவிடாமல் ஆராதித்த தானியேல் விடுதலை பெற்றார். எந்த ஆராதனையில் இப்படி பட்ட மறுரூவம் ஏற்பட வில்லையோ அங்கு தான் மோசடி நடக்கிறது. ரசிகர்களை விட சீஷர்கள் தான் ஆராதனையில் வெளிப்படும் வெற்றி. கிறிஸ்து மகிமையான வெற்றி கொண்டார். எப்பொழுது! கிறிஸ்து சிலுவையில் எல்லா பாவம், சாபம், மரணம் மற்றும் உலகத்தை ஜெய்த்த போது தான் ஆராதனையில் மகத்துவம் வெளிப்பட்டது. அங்கே தான் அவருக்கு எல்லா நாமத்திற்கு மேலான நாமம் கொடுக்க பட்டது. வெற்றியுள்ள வாழ்வை கொடுக்காத எந்த ஆராதனையும் அர்த்தமில்லாத ஆராதனை தான். பவுல் மற்றும் சீலா பாடி துதித்த போது இரச்சிப்பின் கம்பீர சத்தம் சிறைச்சாலையில் கேட்கப்பட்டது.

சத்தியமும், உண்மையும், தேவபக்தியும் பரிசுத்தமும், அற்பணிப்பும் கொண்டு வராத எந்த ஆராதனையும் கர்த்தர் முன்பாக எந்த அங்கீகரிப்பு இல்லாத மனித திருப்திக்கு என்று செய்யப்படும் உடற்பயிற்சி, பொழுதுபோக்கு, கேளிக்கை மற்றும் பாட்டு கச்சேரிகள் தான் என்பதில் எந்த ஐயமுமில்லை. எனவே கிறிஸ்து வெளிப்பட்டு, பிதா மகிமைப்பட, ஆவியானவரின் ஆகதூண்டுதலின் துணையோடு, சபை பக்திவிருத்தி, சுவிசேஷ தாகம் மற்றும் தனிப்பட்ட மறுரூபம் கொண்டு வரும் புத்தியுள்ள ஆராதனை செய்ய கர்த்தர் கிருபை தருவாராக! எனெனில் அவரோடு கூட நித்திய நித்திய காலம் வாழ போகும் நாம் அவரை மகிமைபடுத்த தான் அழைக்கப்பட்டு இருக்கிறோம் என்கிற பெரிய நம்பிக்கை பெற்ற நாமே பாக்கியவான்கள். கனம் மகிமை அவர் ஒருவருக்கே!

செலின்.

மக்கள் அதிகம் வாசித்தவை:

தமிழ்நாட்டின் கல்விக்கு கிறிஸ்தவம்தான் - பழனிசாமி கோவையில் புகழுரை!
கிறிஸ்துமஸ் தினத்தின்போது சர்ச்சில் இரவு வழிபாட்டுக்கு போலீஸ் அனுமதி பெற வேண்டும்: போலீஸ் கமிஷனர் மக...
கிறிஸ்துவால் மட்டுமே விடுதலை - ஒரு ஆய்வு
கல்லறைக்கு இடம் இல்லாமல் தவிக்கும் புதிய மற்றும் சுயாதீன திருச்சபைகளை மனதில் கொண்டு சில ஆலோசனைகள்
கேள்வி: நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள் என்றால் என்ன? இதைப் பற்றின விளக்கம்
கிறிஸ்துவின் குணாதிசயத்தின் சாட்சிகள்
விசுவாசிகளின் பிரச்சனையில் யார் போய் நிற்பது?
சிறுமைப்பட்டவன்
வாழவைத்து வாழ்ந்துகாட்டு - உண்மை சம்பவம் (சிறுகதை)
ஹிட்லரின் நாஜி படை திருடிய புராதன கிறிஸ்துவ தேவாலய மணி தாய் நாடு செல்கிறது

Share this page with friends