கிறிஸ்துவின் குணாதிசயத்தின் சாட்சிகள்

Share this page with friends

நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள். லூக்கா : 24 : 48

இந்தக் குறிப்பில் இயேசு கிறிஸ்துவின் குணாதிசயத்திற்கு சாட்சிகளாய் இருந்தவர்கள் யார் யார் என்று சிந்திக்க போகிறோம். நாமும் கிறிஸ்துவின் குணாதிசியத்திற்கு சாட்சியாகவும் , இயேசுவைக் குறித்து சாட்சி சொல்லுபவர்களாகவும் இருக்கவேண்டும். இதைத்தான் உயிர்த்தெழுந்த இயேசு சொன்னது இவைகளுக்கு சாட்சியாயிருங்கள். யாரெல்லாம் அவரைக்குறித்து சாட்சி சொன்னார்கள் என்பதை இதில் சிந்திக்கலாம்.

 1. வானத்திலிருந்து இயேசுவைக் குறித்து பிதாவின் சாட்சி ” நேசகுமாரன் “
  மத் : 3 : 17 , 17 : 5
  2 பேது : 1 : 17 , 18
 2. பாதாளத்திலிருந்து இயேசுவைக் குறித்து அசுத்த ஆவிகள் சாட்சி. ” பரிசுத்தர் “
  மாற்கு : 1 : 24
 3. இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸின் சாட்சி ” குற்றமற்றவர்”
  மத் : 27 : 14
  1 பேது : 1 : 19
 4. இயேசுவைக் குறித்து அரசனாகிய ஏரோதுவின் சாட்சி ” நிரபராதி “
  லூக்கா : 23 : 15.
 5. இயேசுவைக் குறித்து தேசாதிபதியாகிய பிலாத்து, மற்றும் அவரது மனைவியின் சாட்சி ” நீதிமான் “
  மத் : 27 , 19 , 24
 6. இயேசுவைக் குறித்து கள்ளனுடைய சாட்சி ” மாசில்லாதவர் “
  லூக்கா : 23 : 41
  1 பேது : 1 : 19
 7. இயேசுவைக் குறித்து நூற்றுக்கு அதிபதியின் சாட்சி ” நீதிபரர் “
  லூக்கா : 23 : 47. ” தேவகுமாரன் “
  மத் : 27 : 54.

மேல் சொல்லப்பட்ட சாட்சிகள் கிறிஸ்துவின் குணாதிசயத்திற்கு உண்டான சாட்சிகள். நாமும் கிறிஸ்துவுக்கு சாட்சியாகவும் மற்றும் இயேசுவைக் குறித்து சாட்சி சொல்லுபவர்களாகவும் இருக்க வேண்டும். இயேசுவும் இதை இவைகளுக்கு நீங்களும் சாட்சியாக இருக்கிறீர்கள் என்றார்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur


Share this page with friends