உலக செவிலியர் நாள்

Share this page with friends

உலக செவிலியர் நாள் இன்று: மே ’12

இங்கிலாந்தில் செல்வ குடும்பத்தில் பிறந்து வளர்ந்து செவிலியர் தொழிலில் ஈடுபட்ட பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாள் நாளான மே’ 12 உலக செவிலியர் நாளாக கொண்டாடப்படுகிறது.

1854 இல் ரஷ்யாவுக்கு எதிராக நடந்த போரில் பாதிக்கப்பட்ட படைவீரர்களுக்கு இரவு பகல் பாராமல் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் செவிலியர் குழுவுடன் போர்களத்திற்கு சென்று மருத்துவ உதவிகள் செய்தார்.

இரவு நேரங்களில் கையில் விளக்கேந்தி வண்ணம் நோயாளிகளிடம் சென்று நலம் விசாரித்து மருந்துகள் வழங்கினார். அதனால் அவர் கையில் “விளக்கு ஏந்திய காரிகை” என அழைக்கப்பட்டார் .

? செவிலியருக்கென மரியாதையையும் ,கண்ணியத்தையும் உருவாக்கிக் கொடுத்தவர் அவர்தான்.

1965 ஆம் ஆண்டு முதல் பிளாரன்ஸ் நைடிங்கேல் அவர்களின் சேவை பாராட்டி அவரின் பிறந்தநாளை உலக செவிலியர் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது

? செவிலியர் பணி என்பது தொழில் அல்ல, ஒருவகை தொண்டு சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு சகிப்புத்தன்மையுடன் ஆற்றும் மகத்தான சேவையை செவிலியர் பணி.

? “செவிலியர் இன்னொரு தாய்”!!

அவர்களின் பணியை போற்றுவோம்!!

அவர்களின் பணி மதிக்கத்தக்கது!!

அவர்களின் பணி வணங்கத்தக்கது!! ????


Share this page with friends