மகத்துவங்களை எழுதி வரலாற்றுச் சாதனை!

Share this page with friends

என் வேதத்தின் மகத்துவங்களை
அவர்களுக்கு எழுதிக் கொடுத்தேன்;
அவைகளை அந்நியகாரியமாக
எண்ணினார்கள்
(ஓசியா 8:12)

அந்தக் காலத்திலும்
இந்தக் காலத்திலும்
வேதத்தை அந்நியகாரியமாக
எண்ணும் இந்த உலகில்


அதை தன் சொந்தக்காரியமாக எண்ணி
எழுதிக்கொடுக்கப்பட்ட வேதத்தை
தங்கிலீஷ் -இல் எழுதிக்கொடுத்த
தங்க மகன்

சாம் சாலொமோன் பிரபு
என்று சொன்னால் அது மிகையாகாது

tcnmedia.in என்ற நமது
வலைதளத்தில் வலம்வரும்
இளைய மகன்

சாம் சாலொமோன் பிரபுவை

கிறிஸ்தவ உலகம்
பாராட்ட மறந்தாலும்


UNIVERSAL ACHIEVERS BOOK OF RECORDS
WORLD RECORD CERTIFYING ORGANISATION

என்னும் இந்திய அரசாங்கத்தால்
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்


27. 11. 2021 அன்று மாலை
மதுரையில் நடைபெற்ற

உலக சாதனை விருது வழங்கும் விழாவில்
விருது வழங்கி

கெவுரவப்படுத்தியுள்ளது

யோசேப்புக்குள் இருந்த
தரிசனப் பார்வையை
கண்டுபிடித்து

கனப்படுத்தியது
ஒரு பிஷப் அல்ல
,

எகிப்தின் அதிபதி பார்வோன்
என்பதை இங்கே
பதிவிட விரும்புகிறேன்.

2011-ல் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில்,
MCC -ல் MCA கற்றவர்
சென்னை பல்கலை கழகத்தால்
தங்க மெடல் பெற்றவர்

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு
2021 -ல் இன்று
வரலாற்றுச் சாதனை

படைத்துள்ளார்

இக்கால
இளைய தீமோத்தேயுவைப் போல
சுவிஷேசத்திற்காக
தன்னை அர்ப்பணித்தவர்

அநித்தியமான பாவ சந்தோஷங்களை
வெறுத்த மோசேயைப் போல
எகிப்தின் மீது கண்வைக்காமல்


தேவ ஜனத்தின் மீது கண்வைத்து
தனது கணிப்பொறியில் கைவைத்து

4 மாதங்களும் 14 நாட்களும் இடைவிடாமல்
கணிப்பொறியில் கடுமையாக உழைத்து
4,19,127 வார்த்தைகளை

தங்கிலீஷில் எழுதியுள்ளார்

மாதந்தோறும் பல லட்சங்களைச்
IT உலகில் சம்பாதித்த இவர், அதை
துணிச்சலாக துறந்துவிட்டு
தேவனுடைய பணியில் ஈடுபட்டு
எதிர்நீச்சல் போட்டு ஏறிவருகிறார்

பிரபுவே,
தேவனுடைய பிரபுவே,


உங்கள் சாதனை
என்னும்
தேரோட்டம் தொடரட்டும்
அகில உலகத்தையும்
பற்றிப் படரட்டும்

வறண்டு கிடக்கும் இந்த பூமியில்
வசனத்திற்காக உழைக்கும்

உங்கள் கரங்கள்
வானளாவ உயரட்டும்
என்று வாழ்த்துகிறேன்

Pastor J. ISRAEL VIDYA PRAKASH B.Com.,
DIRECTOR
LITERATURE DEPT.
tcnmedia.in






Share this page with friends