ராமகோபால் ராவ் குழு பரிந்துரைத்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் கோரிக்கை

ஐஐடி கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய ராமகோபால் ராவ் குழு பரிந்துரைத்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் சகோ. ஜெபசிங் கோரிக்கை. இட ஒதுக்கீடு ரத்து தொடர்பாக ஜெபசிங் வெளியிட்டுள்ள அறிக்கை.
ஐஐடி கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியர், ஆசிரியர் நியமனங்களில் கடைபிடிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டு முறையை நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு டெல்லி ஐஐடி இயக்குநர் ராம் கோபால் ராவ் தலைமையிலான வல்லுநர் குழு பரிந்துரை அளித்துள்ளது. ராம்கோபால் ராவ் வல்லுனர் குழுவின் பரிந்துரை சமூகநீதிக்கு எதிரானது
ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனங்களின் போது இட ஒதுக்கீடு இல்லாமல் நீண்ட காலமாக இருந்து வந்தது. 2019 ஆம் ஆண்டு மத்திய அரசால் சட்டம் இயற்றப்பட்டடு அச் சட்டத்தின்படி மத்திய கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலினத்தவர்கள் பழங்குடியினர் ஆகிய பிரிவிரைுக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டது. இதனை மத்திய அரசின் கவனத்திற்கு நாடாளுமன்ற குழு கொண்டு சென்றது. இதனை தொடர்ந்து ஆசிரியர் நியமனங்களில் முழுமையாக இட ஒதுக்கீடு முறையை நடைமுறைபடுத்த வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து சுற்றிக்கை அனுப்பியது.
இந்த நிலையில் இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைபடுத்தாமல் சட்டத்தை நீர்த்து போக செய்யும் செயலாக டெல்லி ஐஐடி இயக்குநர் ராம் கோபால் ராவ் தலைமையிலான வல்லுந்ர் குழு இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய பரிந்துரை செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ஐஐடிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கு தகுதியான ஆட்கள் இட ஒதுக்கீட்டு பிரிவிலிருந்து கிடைப்பதில்லை என அக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இட ஒதுக்கீட்டு பிரிவினரில் தகுதியான ஆட்கள் இல்லை என வல்லுநர் குழு தெரிவித்து இருப்பது சிறுமைப்படுத்தும் செயலாகும். அனைத்து தகுதிகளையும் கொண்ட இடஒதுக்கீட்டு பிரிவினர் ஏராளமானோர் இருக்கும் போது அவர்களுக்கு தகுதி இல்லை என்ற முடிவுக்கு வல்லுநர் குழு தெரிவித்து இருப்பது எவ்வாறு என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
ராம்கோபால் ராவ் தலைமையிலான வல்லுநர் குழு அமைக்கப்பட்டதன் நோக்கமே இட ஒதுக்கீட்டை எவ்வாறு சிறப்பாகச் செயல்படுத்தலாம் என்பது குறித்து பரிந்துரைப்பதற்காகத் தான். ஆனால் அந்த குழுவோ இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என பரிந்துரை செய்திருப்பது முரண்பாடாக உள்ளது. சமூகநீதிக்கு எதிரான இந்த பரிந்துரையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கவும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினர் ஆகிய பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீட்டு முறையை தொடர்ந்து அழுல்படுத்திட வேண்டும் எனவும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் தலைமை செய்தி தொடர்பாளர் சகோ.ஜெபசிங் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.