உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் சகோ.ஜெபசிங் புத்தாண்டு வாழ்த்து செய்தி

புத்தம் புதிய 2021ம் ஆண்டு நிறைய எதிபார்ப்புகளுடன் பிறக்கின்றது. சாதி, மத பேதங்களை கடந்து மொழி, இனம், கலாச்சாரம் என அனைத்தையும் கடந்து இந்த உலகம் முழுக்க வாழும் அத்தனை தமிழ் உறவுகளுக்கும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
வாழ்க்கை தனிப்பட்ட வாழ்க்கையாக அமையாமல் பொதுநலம் கலந்த வாழ்க்கையாக அமைய வேண்டும். கடந்த ஆண்டு நாட்டில் நடந்த பெருங் கசப்பான கரோனா நோய் ஒழிய வேண்டும் – விவசாயிகள் போராட்டம்.சிறுபான்மையினர் மீதான தாக்குதல் போன்ற துன்பங்கள் மறையும் ஆண்டாக 2021 அமைய வேண்டும்.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இல்லாத பாதுகாப்பான நாடாக இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர செய்ய நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.
தமிழ் இனத்துக்கு உயிரோடு இணைந்த அனைத்து தமிழ் உறவுகளுக்கும் மதங்கள் அற்ற ஒரு மாதம், சாதிகள் அற்ற ஒரு சகாப்தம் பிறக்கட்டும். பெண்களையும் ஆண்களையும் சமமாய் போற்றும் சரித்திர ஆண்டாக இந்த 2021ம் ஆண்டு அமையட்டும் ஒரு மனிதனின் உணர்வுகளை புண்படுத்தும் எந்த சொல்லையும் வரக்கூடிய புத்தாண்டில் சொல்ல வேண்டாம். உங்கள் சொல்லில் செயலில் உங்கள் குறைகளை சுட்டிக் காட்டும் எவருக்கும் நன்றி உள்ளவராய் இருப்போம்.
நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம்மில் வேருன்றிவிட்டால் அதை செய்வதற்கு ஒரு காரணமும் தேவையில்லை. நன்மை செய்யும்போது மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.
2021 ம் புத்தாண்டு புதிய உற்சாகமும், புத்தெழுச்சியும் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வில் நல்ல முன்னேற்றமும் விவசாய பெருமக்களுக்கு வருகின்ற புத்தாண்டு துயர் துடைக்கின்ற ஆண்டாக அமையவும் உலக தமிழ் மக்கள் அனைவருக்கும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக தலைமை செய்தி தொடர்பாளர் சகோ.ஜெபசிங் தெரிவித்துள்ளார்