கரும்பு விவசாயி ராஜாங்கம் தற்கொலை செய்து கொண்ட அவருடைய குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை.

தமிழக அரசு, கரும்பு விவசாயி ராஜாங்கம் தற்கொலை செய்து கொண்ட அவருடைய குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை.
செய்யாறு அருகே முளகிரிபட்டு கிராமத்தில் பூச்சி மருந்து குடித்து விவசாயி ராஜாங்கம் தற்கொலை செய்து கொண்டார். ராஜாங்கம் இரண்டு ஏக்கர் நிலத்தில் கரும்பு சாகுபடி செய்திருந்தார். தான் விவசாயம் செய்திருந்த நிலத்தில் காட்டுப்பன்றிகள் புகுந்து கரும்பு காட்டை அழித்து விட்டன. இதனால் ராஜாங்கம் வேறு வருமானமும் இல்லாத காரணத்தில் மனமுடைந்து இருந்துள்ளார்
கடன் வாங்கி சாகுபடி செய்த நிலையில் காட்டுப்பன்றிகள் கரும்பை தின்று அழித்த நிலையில் கரும்பு வெட்டினால் வெட்டுக் கூலிக்குக் கூட ஆகாது என்ற நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ராஜாங்கத்தின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் ஆதரவற்ற நிலையில் தவித்து வருகின்றனர்
தமிழக அரசு ராஜாங்கம் குடும்பத்தினருக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் தெரிவித்துள்ளார்.