தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை

Share this page with friends

அண்மையில் பெய்த தொடர் மழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு விவசாயிகளுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக விவசாய மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் மழை நீரில் மூழ்கிக் கிடப்பதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்கள் ஏற்கனவே நிவர் மற்றும் புரெவி புயலில் சிக்கி அதிலிருந்து மீண்டு வந்துள்ள நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக விவசாயிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

தென்மாவட்டங்களான தூத்துக்குடி திருநல்வேலி, மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களும் இடைவிடாமல் மழை பெய்தமையால் விவசாய பயிர்கள் கடும் சேதமடைந்து உள்ளன.

சுமார் 5.60 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் பாதிப்படைந்து உள்ளதாக அரசு தகவல் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட பயிர்கள் கணக்கெடுப்பு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.. அதன்படி வேளாண்மை மற்றும் வருவாய்த்துறை கணக்கெடுப்பை தொடங்கி உள்ளனர்.

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தலை சாய்ந்து விட்டன. வயல்களில் பெருமளவில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இயந்திரங்கள் கொண்டு அறுவடை பண்ண எந்த சாத்தியமும் இல்லை.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூபாய் 30 ஆயிரம் வழங்கிடவும், விவசாயிகள் வாங்கிய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்யவும் ‘பயிர்க் காப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் வழங்கிடவும் தமிழக விவசாயிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் வழங்கிட வேண்டும் என உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கையில் தெரிவித்துள்ளார்

மக்கள் அதிகம் வாசித்தவை:

சமூக செயற்பாட்டாளர் ஜெபசிங் அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான முனைவர் பட்டம் வழங்கப்பட்டது
நான்கு நற்செய்தி நூல்கள் ஏன்?
In his hands - Christian Quotes
வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கும் எழு விதமான சுத்திகரிப்பு. 7 process of purification.
ஸ்டேன் சுவாமி அஸ்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை! - வீடியோ
இன்று காலை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சிறுபான்மையினர் குறைகேட்பு கூட்டத்தில் நேஷனல் க...
சட்டம் பிறப்பிக்கப்பட்ட காலத்தில் பிறந்த குழந்தை
சென்னை எழும்பூரில் உள்ள புனித ஆண்ட்ரூஸ் தேவாலயத்தின் 200-வது ஆண்டு விழா - பெருமிதத்துடன் கொண்டாடப்பட...
கர்த்தர் எவைகளில் பிரியமாய் இருக்கிறார்?
இஸ்ரேல் நாட்டில் இருந்து 1,300 ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலம் இந்தியா வருகை

Share this page with friends