ஊட்டி, ஓசூர், தாளவாடிக்கு சொந்தம் கொண்டாடும் வாட்டாள் நாகராஜுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கண்டனம்.

Share this page with friends

நெல்லை: 12.02.2021

ஊட்டி, ஓசூர், தாளவாடிக்கு சொந்தம் கொண்டாடும் வாட்டாள் நாகராஜுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கண்டனம்.

தமிழகம் பகுதிகளான தாளவாடி, ஊட்டி.ஓசூர் ஆகியவற்றை கர்நாடகாவுடன் இணைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்த போவதாக கன்னட சலுவளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்து இருப்பது கண்டனத்துக்குரியது.

வாட்டாள் நாகராஜ் சகோதர சகோதிரிகளாக வாழும் தமிழக கர்நாடக மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் நோக்கத்திலும். சர்ச்சைக்குரிய வகையில் தமிழக முதல்வர் மேகதாது அணை கட்டுவதை தடுக்க முடியாது என்றும் அணை கட்டியே தீருவோம் என்றும் பேசியுள்ளார் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் கோலார் தங்கவயல், பெங்களூரு நகரப் பகுதி ஆகியவை கர்நாடகாவுடன் சேர்க்கப்பட்டு விட்டன.

தமிழகப் பகுதிகளில் தொடர்ந்து பிரச்சனைகளை ஏற்படுத்தி மக்களிடையே பிரிவினை போக்கையும் , மோதல் போக்கையும் ஏற்படுத்த முயற்சி செய்து வரும் வாட்டாள் நாகராஜ் போன்றவர்களுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


Share this page with friends