அரசு தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் நிரந்தரப் பணிவழங்க தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை

Share this page with friends

அரசு தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் நிரந்தரப் பணிவழங்க தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை

தமிழகத்தில் தொடக்க கல்வித் துறையில் உள்ள 30 798 பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர்கள் ரூ 1000 கூட ஊதியம் இல்லாமல் ஒராண்டாக பணிபுரிந்து வருகின்றனர்.

இப்பள்ளிகளில் துப்புரவுப் பணிகள் கழிப்பறைகள் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ளுவதற்காக 2016 ஜனவரி மாதம் முதல் பள்ளி மேலாண்மைக் குழுவின் ஒப்புதலுடன் ஒரு பணியாளரை நியமித்துக் கொள்ள கல்வித்துறை ஒப்புதல் வழங்கியது.

தொடக்கப் பள்ளியில் துப்புரவுப் பணியை மேற்கொள்ளுவோர்க்கு மாதம் 1000 மும் நடுநிலைப் பள்ளிகளில் துப்புரவுப் பணியை மேற்கொள்வோருக்கு மாதம் ரூ 1500 ம் ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கான ஊதியத்தை 4 மாதத்திற்கு ஒரு முறை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மூலம் பள்ளி மேலாண்மைக் குழு கணக்கில் வரவு வைக்கப்பட்டு துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பின்பு இவர்களுக்கு இந்த குறைந்தப்பட்ச ஊதியமும் வழங்கப்படவில்லை.கரோனா கால கட்டத்தில் தினமும் பள்ளிக்கு வந்து கழிப்பறைகள், பள்ளி வளாகத்தை துப்புரவு செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் பள்ளிகளில் துப்புரவு பணியை மேற்கொள்ளுவதால் வேறு தினக்கூலி பணிக்கு கூட செல்ல முடிவதில்லை. காலையில் கழிப்பறைகள், வகுப்பறைகள், பள்ளி வளாகம் பள்ளியின் முன்புறம் உள்ளிட்ட பகுதிகளை துப்புரவு செய்ய வேண்டும். மதியம் மாணவர்கள் சத்துணவு சாப்பிட்ட பின்னர் சாப்பிட்ட இடத்தை துப்புரவு செய்ய வேண்டும் இவ்வளவு பணிகளைக் செய்தாலும் ஒரு நாளைக்குக் கூலி ரூ 33 மட்டும் தரப்படுகிறது. இதனை வைத்து இவர்கள் குடும்பத்தை நடத்துவது நினைத்து பார்க்க முடியாத காரியம். இந்த ஊதியமும் கடந்த 11 மாதமாக வழங்கப்படவில்லை.

தமிழக முதல்வர அவர்கள் துப்புரவு பணியாளர்கள் நலனில் அக்கறை கொண்டு இந்த வேலையை அரசு வேலையாக மாற்றி அமைத்து குறைந்தப் பட்ச ஊதியமாக மாதம் ரூபாய் 12000 வழங்கிடவும் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 31 ஆயிரம் துப்புரவுப் பணியாளர்களின் வாழ்வாதாரம் உயர்ந்திடவும் தமிழக முதல்வர் அவர்கள் தனிக்கவனம் செலுத்தி தொடக்கக் கல்வித் துறையில் கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு கெளரமான ஊதியம் மற்றும் நிரந்தப் பணியை வழங்க உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Share this page with friends