முதியோர், மாற்று திறனாளிகளுக்கு உடனடியாக உதவித் தொகை வழங்க வேண்டும் தலைமை செயலாளருக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை மனு

தமிழகம் முழுவதும் முதியோர், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்க்கு மாதந்தோறும் ஓய்வூதியம், உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதத்திற்க்கான உதவித் தொகை தற்போது வரை யாருக்கும் வழங்கப்படவில்லை. கரோனா தீவீரமாக உள்ள இந்த கால கட்டத்தில் முதியோர், மாற்று திறனாளிகள், கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோர் உதவித் தொகை வழங்கப்படாததால் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்,
சட்டப்பேரவைத் தேர்தல் விதிமுறைகள் காரணம் காட்டி ஓய்வூதியம், உதவித் தொகை வழங்கப்படவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்’
இதற்கு முந்தைய தேர்தல்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தாலும் உதவித் தொகைகள் வழங்குவது நிறுத்தப்படவில்லை.
எனவே தமிழக தலைமைச் செயலாளர் அவர்கள் உடனடியாக உதவித் தொகை பிரச்சனைக்கு தீர்வு கண்டு முதியோர், மாற்று திறனாளிகள், கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோர்க்கு வருகின்ற மாதத்தில் விரைவில் உதவித் தொகை கிடைக்க ஆவண செய்யும்படி உலக தமிழ் கிறிஸ்தவ சம்மேளனம் செய்தி தொடர்பாளர் ஜெபசிங் தனது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.