பூர்வகுடி தமிழர்களுக்கு மாற்று இடம் வழங்க உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் கோரிக்கை

டிசம்பர் 13,
சென்னை காந்திநகர், சத்தியவாணி முத்துநகர் மக்களுக்கு மாற்று இடம் வழங்கி வெளியேற்ற உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை.
சென்னை தீவுத்திடல் அருகே உள்ள சத்திய வாணி முத்துநகர், காந்திநகர் உட்பட்ட பகுதிகளில் பூர்வகுடிகளாக வசித்து வரும் தமிழர்கள் சுமார் 2500 குடும்பங்களை சேர்ந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை வெளியேற்ற உள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
காலங்காலமாக வாழ்ந்து வரும் தமிழ் மக்களை எந்த வித முன் அறிவிப்பும் இன்றி அவர்கள் வாழ்ந்து வரும் குடிசை பகுதிகளை இடித்து அப்புறபடுத்துவது வேதனையளிக்கிறது
.
தமிழகத்தில்.தலைநகரமாக விளங்கும் சென்னை மாநகரில் நீண்ட காலமாக வசிக்கும் ஏழை, எளிய மக்களை அவர்கள் இருப்பிடத்தில் இருந்து வெளியேற்றுவது ஏற்புடையதல்ல.
குடிசை பகுதிகளில் வசிக்கும் தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழக மக்களுக்கு பல நல திட்ட பணிகளை செய்து வரும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் சென்னை தீவுத்திடல் அருகே சத்திய வாணி முத்துநகர், காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் தமிழர்களை பாதுகாப்பான நிரந்தரமான வசிப்பிடங்களை உருவாக்கி கொடுத்து தர வேண்டும் என உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை வைத்துள்ளார்.