செம்மொழி தமிழ் ஆய்வு மையம் தொடர்ந்து செயல்பட உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் கோரிக்கை

மதுரை, டிச.05
இந்திய மொழிகள் ஆய்விற்காக மைசூரில் 1969ல் இந்திய மொழிகள் மத்திய நிறுவனம் அமைக்கப்பட்டது. தற்போது இந்திய மொழிகள் நிறுவனத்தை பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயா என்று மத்திய அரசு இந்தியில் பெயர் மாற்றி செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழிகளை இதன் துறைகளாக இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது தமிழுக்கு என்று செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் 13 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மற்ற மொழி செம்மொழி அந்தஸ்தினை பெற்றாலும் தமிழைப் போல அவற்றுக்கு தனி ஆய்வு நிறுவனம் அமைக்கப்படாததால் பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயா இதன் துறைகளாக இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயா என்ற மத்திய பல்கலைக்கழகமாக பெயர் சூட்டி அத்துடன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை இணைக்க கூடாது எனவும், செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னையிலேயே தொடர்ந்து செயல்பட தமிழகத்தில் பல்வேறுநலத்திட்ட பணிகளை மக்களுக்கு செய்து வரும் தமிழக முதல்வர் அவர்கள் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க உலக தமிழ் கிறிஸ்வர்கள் சம்மேளனம் சார்பில் மாநில செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை விடுத்துள்ளார்.