தனியொரு மனுஷனாகிய நீயே தேவனுக்கு விஷேஷமானவன்!

Share this page with friends

தனியொரு மனுஷனாகிய நீயே தேவனுக்கு விஷேஷமானவன்!

வேதாகமம் முழுவதையும் ஆராய்ந்து பார்த்தால் திரளான கூடட மக்களை கொண்டு தேவன் செய்து முடித்த காரியங்களைவிட தனியொரு மனுஷனை கொண்டு அவர் செய்து முடித்த காரியங்களே அநேகமாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது.

ஆதி உலகமே அடியோடு சீர்கெட்டு போன நிலையில் அடங்காத அக்கிரமத்தால் அழிவை நோக்கி அமிழ்ந்து போகும் நிலையில், “நோவா” என்னும் ஒரே மனுஷன் மாத்திரம் நீதிமானாக இருக்க, அவன் மூலமே அடுத்த ஒரு புதிய சந்ததியை தேவன் உருவாக்கினார்.

எனவே, “எல்லோருமே வழி விலகி ஏகமாக கெட்டுப்போனாலும், ஏற்ற வழியை கண்டடையாமல் இங்கும் அங்கும் இடறி போனாலும் உன் ஒருவனை மாத்திரம் கொண்டு தேவன் புதிய ஒரு உலகத்தையே உண்டாக்க முடியும்! எனவே நீ தேவனுக்கு விசேஷமானவன்

புறஜாதிகளின் கூடடம் உலகத்தை ஆக்கிரமித்திருந்த நேரத்தில், அந்நிய தேவர்களை சேவித்து அறிவிழந்து வாழ்ந்த அந்த காலத்தில் அவர்களுக்குளிருந்து தேர்ந்தெடுக்கப்படட ஆபிரகாம் என்னும் ஒருவனின் அதீத விசுவாசத்தை கொண்டே ஆண்டவர்
அகிலத்தின் வம்சங்களை எல்லாம் ஆசீர்வதித்தார் .

அதுபோல் நம்மை சுற்றி ஆயிரமாயிரம் புறஜாதியார் நிறைந்திருந்தாலும், அவர்களிடமெல்லாம் ஆண்டவருக்கு ஏற்ற விசுவாசம் இல்ல்லாமல் போனாலும், உத்தமமாய் விசுவாசிக்கும் உன் ஒருவனின் விசுவாசத்தின் மூலம் மட்டுமே தேவன் உலகத்தையே மீட்டு விட முடியும்! எனவே நீ தேவனுக்கு விஷேஷமானவன்.

அந்நிய தேசத்திலே ஆண்டவரின் ஜனங்கள் அநேக ஆண்டுகள் அடிமைத்தனத்தில் கிடந்தபோது. ஆளோட்டிகளின் அக்கிரமத்தை தாங்கமுடியாமல் தவித்தபோது, ஆற்றில் வீசப்பட்டும்
அரண்மனைக்குள் வந்த “மோசே” என்னும் ஒரே ஒரு மனுஷனை கொண்டே தேவன் தன மொத்த ஜனங்களையும் விடுவித்து சுதந்தர தேசமாகிய கானானை நோக்கி நடத்தினார்.

எனவே, கிருபையை பெற்ற கிறிஸ்த்தவர்கள்கூட இன்று பாவத்தில் வீழ்ந்து கிடைக்கலாம், சங்கடங்களை தாங்கமுடியாமல் சத்துருவுக்கு
சாதகமாகி சரியில்லாமல் இருக்கலாம் ஆனால் உன் ஒருவனை மாத்திரம் கொண்டு தேவன் அத்தனை பேரையும் சந்துருவின் கரத்தில் இருந்து பிடுங்கிவிட முடியும்! எனவே நீ தேவனுக்கு விஷேஷமானவன்.

தன் ஜனங்களுக்கு தலைவனாக தேர்ந்தெடுத்த சவுல் தவறு செய்து தகுதி இழந்தபோது, அபிஷேகம் செய்துவைத்த அரும்பெரும் சாமுவேலே அதற்காக துக்கித்தபோது, அடுத்த தலைவனாக அபிஷேகம் பண்ணப்படட “தாவீது” என்னும் ஒரே ஒருவனை கொண்டே தேவன் தன ஜனங்களை எதிரிகளிடம் இருந்து இரட்சித்து இஸ்ரவேலரை ஒரு அசைக்க முடியாத சக்தியாக உருவாக்கினார்.

அதுபோல் சகலத்துக்கும் மேலாக நின்று சபையை நடத்தும் பாஸ்டரே தடம் மாறிப்போனாலும், ஊரே போன்றும் ஊழியக்காரரே உத்தமம் தவறி வீழ்ந்து போனாலும் தேவனுக்கு பிரியமாய் நடக்கும் உன் ஒருவனை கொண்டே தேவன் தன மொத்த ஜனங்களை இரட்சித்து சத்துருவுக்கு சவாலாக நிறுத்த முடியும்! எனவே நீ தேவனுக்கு விஷேஷமானவன்.

இதுபோல் தனி மனுஷர்களாக நின்று தக்க நேரத்தில் சாதனைகள் செய்து தேவ சித்தத்தை செய்து முடித்த சாமுவேல், கிதியோன், சிம்சோன், எலியா, எலிசா. எஸ்தர், எசெக்க்கியேல், தானியேல் என்று தனி மனுஷர்கள் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

எல்லாவற்றிக்கும் மேலாக!

ஆண்டவரின் வார்த்தையை அசடடை செய்து மீறிய ஆதாம் எனும் தனியொரு மனுஷனாலேயே, அகால மரணமும் அதை நோக்கி நடத்தும் பாவமும் அத்தனை பேருக்கும் வந்தது. தக்க சமயத்தில் தனியொரு மனுஷனாக தானே இறங்கி வந்த தந்தையின் மைந்தனாம் இயேசு என்னும் ஒரே இரட்ச்சகராலேயே இனிதான இரட்சிப்பும் இவ்வுலகுக்கு கிடைத்தது. எனவே, திரள் கூடடத்தார் செய்வதை திகைப்போடு பார்த்து அவர்களின்அ டங்காத நிலையை ஆவியில் அறிந்து புரியாத வேதனையுடன் புலம்பிக்கொண்டிருக்கும் தேவ பிள்ளையே! “நீ” “நீயே” தேவனுக்கு மிகவும் முக்கியமானவன்(ள்). தேவ சிந்தையை அறிந்தவனாக செயல்படும் உன் ஒருவனை(ளை) கொண்டே தேவன் தன செயல் திடடத்தை நிறைவேற்றிவிட முடியும் .

எரேமியா 51:20 நீ எனக்கு தண்டாயுதமும் அஸ்திராயுதமுமானவன்; நான் உன்னைக்கொண்டு ஜாதிகளை நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு ராஜ்யங்களை அழிப்பேன்.

எனவே தேவனுக்கு முன்பு நடந்துகொண்டு நீ உண்மையும் உத்தமுமாயிரு!

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends