என்னோடிருக்கிறாய்

அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாய் இருக்கிறது லூக் : 15 : 31.
தகப்பனோடு இருக்கும் மகனுக்கு கிடைக்கும் ஆசீர்வாதத்தை பார்த்தீர்களா ? எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது. நம் இயேசப்பாவுடையதெல்லாம் நம்முடையது. இந்தக் குறிப்பில் இரண்டு காரியாத்தை கவனிக்கலாம். முதலாவது எவையெல்லாம் அவருடையது , மற்றும் அவரோடு இருந்த தேவ மனிதர்கள் யார் என்பதையும் கவனிக்கலாம்.
எது கர்த்தருடையது ?
- கிருபை , வல்லமை கர்த்தருடையது. – சங் : 62 : 11 , 12
- வெள்ளியும் , பொன்னும் கர்த்தருடையது. – ஆகார் : 2 : 8
- ஜெயம் , மகிமை கர்த்தருடையது – 1 நாளாக : 29 : 11
- இரட்சிப்பு கர்த்தருடையது – யோனா : 2 : 9
- இராஜ்ஜியம் கர்த்தருடையது – மத் : 6 : 13
- பூமியும் அதன் நிறைவும் உலகமும் அதில் உள்ள குடிகளும் கரத்தருடையது – சங் : 24 : 1
கர்த்தரோடே இருந்த தேவ மனிதர்கள்.
- ஆசாப் கர்த்தரோடே இருந்தான் -சங் : 73 : 23
- மோசே கர்த்தரோடே இருந்தான் – யாத் : 34 ‘ 28
- தாவீது கர்த்தரோடே இருந்தான் – சங் : 138 : 18
- பேதுருவும் யோவானும் இயேசுவோடே இருந்தார்கள்-அப் : 4 : 13
இந்தக் குறிப்பில் இரண்டுக் காரியங்களைத் கவனித்தோம். முதலாவதாக எவைகள் கர்த்தருடையது என்பதையும், யார் யார்
கர்த்தரோடே இருந்தார்கள் என்பதையும் கவனித்தோம். நாமும்
கர்த்தரோடே இருந்து அவருடையதெல்லாம் நாமும் சுதந்தரித்துக் கொள்ளலாம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.