நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள்

Share this page with friends

நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள். (லூக்கா : 24 : 48)

இந்தக் குறிப்பில் நாம் எவைகளுக்கு சாட்சியாயிருக்கவேண்டும்
என்பதை சிந்திக்கலாம். இந்த வசனத்திற்கு முன் வசனம் (லூக் : 24 : 47)ல் மனந்திரும்புதலும் , பாவமன்னிப்பும் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தில் பிரசிங்கிக்கப்பட வேண்டும். ஆண்டவர் சொன்னது இவைகளுக்கு நீங்கள் சாட்சிகள் என்று சொன்னார்.
அதன்படி நாம் எவற்றிக்கெல்லாம் சாட்சியாக இருக்கவேண்டுமென்பதை இதில் சிந்திக்கலாம்.

 1. நீங்கள் மனந்திரும்புதலூக்கு சாட்சி
  (லூக்கா : 19 : 8), சாகேயு(லூக் : 15 : 21) கெட்டக்குமாரன் இந்த வருடம் நாம் மனந்திரும்புதலுக்கு சாட்சியாக இருக்கவேண்டும். (அப் : 2 : 38)
 2. நீங்கள் பாவமன்னிப்புக்கு சாட்சி
  (அப் : 5 : 31 , 32), (யோவா : 5 : 14 , 15) பெதஸ்தா குளத்தில் 38 வருட வியாதிஸ்தன் சாட்சி. (மத் : 9 : )2 படுக்கையில் வியாதியாய் கிடந்த திமிர்வாதக்காரன் சாட்சி.திடன்கொள், உன் பாவம் மன்னிக்கப்பட்டது. (யோவா : 4 : 39) ஸ்திரீயின் சாட்சிபாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்றவர்களாக இந்த வருடம் இவைகளுக்கு சாட்சியாயிருங்கள்.
 3. நீங்கள் இரட்சிப்புக்கு சாட்சியாயிருங்கள் (லூக்கா : 3 : 5)
  யோவான்ஸ்நானன் சாட்சி.
  (யோவா : 3 : 32 , 33) பேதுருவின் சாட்சி (அப் : 2 : 40)
 4. நீங்கள் சத்தியத்திற்கு சாட்சியாயிருங்கள்
  (யோவா : 18 : 37), (யோவா : 17 : 17), (3 யோவா : 1 : 3)
  (சங் : 37 : 3) நீங்கள் இந்த வருடம் சத்தியத்திற்கு சாட்சியாயிருங்கள். இயேசு வேத சத்தியாமாய் இருக்கிறார்.
 5. நீங்கள் உண்மைக்கு சாட்சியாயிருங்கள்.
  (அப் : 5 : 31 , 32) பேதுரு உண்மைக்கு சாட்சியாயிருந்தான்
  (எண் : 12 : 7) (எபி : 3 : 5) மோசேவை குறித்து தேவனுடைய சாட்சி. (3 யோவா : 1 : 3) நாம் இந்த வருடம் தேவனுக்கு உண்மைக்கு சாட்சியாக இருக்க வேண்டும்.

இயேசு சொன்ன வார்த்தையும் , இவைகளுக்கு நீங்கள் சாட்சியாயிருங்கள் என்பதுதான். இந்த வருடம் நாம் மனந்திரும்புதலில் சாட்சியாகவும் , பாவமன்னிப்பை பெற்ற சாட்சியாகவும் , தேவனுடைய இரட்சிப்புக்கு சாட்சியாகவும் , தேவனுடைய சத்தியத்திற்கு சாட்சியாகவும். உண்மைக்கு சாட்சியாகவும் நாம் இருக்க வேண்டும். இயேசு சொன்னது இவைகளுக்கு நீங்கள் சாட்சியாய்இருக்கிறீர்கள் என்று சொன்னார். நாமும்வரும் புதிய வருடத்தில் இவைகளுக்கு சாட்சியாக இருப்போம் என்று தீர்மானம் எடுத்துக்கொள்வோம். எடுத்த தீர்மானத்தில் உறுதியாயிருப்போம். இந்த வருடம் இயேசுவுக்கு சாட்சியின் வருடமாயிருக்கட்டும். உயிர்த்தெழுந்த இயேசு யாவரையும் ஆசீர்வதிப்பாராக !

ஆமென் !

S. Daniel Balu
Tirupur.


Share this page with friends