வாலிபனே, உனது விலையேறப்பெற்ற ஆத்துமாவை அடகு வைத்து விடாதே

ஆ வாலிபனே, வாலிபனே, உனது விலையேறப்பெற்ற ஆத்துமாவை அடகு வைத்து விடாதே, அதை விற்றுப்போடாதே, மற்ற உலகப் பொருட்களுக்காக அதை பண்டமாற்று செய்து விடாதே. முட்டாள்த்தனமாக அதினுடன் விளையாடி அதை நாசப்படுத்தி விடாதே. உனது ஆத்துமா விலை மதிப்பிட முடியாத முத்தாகும். அதற்கு ஈடாக 1000 உலகங்களைக் கொடுக்க முடியாது. உனது ஆத்துமா பாதுகாப்பாயிருந்தால் எல்லாம் பாதுகாப்பாயிருக்கும். அது மட்டும் நஷ்டப்படுமேயானால் அனைத்தையும் நீ இழந்துவிடுவாய். இயேசு இரட்சகரை நீ இழந்துவிடுவாய். மகிமை பொருந்திய தேவ தூதர்களையும், பரிசுத்தவான்களின் சங்கத்தையும் நீ இழந்துவிடுவாய். ஏன்? தேவன் தம்மில் அன்புகூருவர்களுக்காக ஆயத்தம் செய்து வைத்துள்ள மோட்சானந்த பாக்கியத்தையே நீ இழந்துவிடுவாய்.

கிரான்டென்சிஸ் என்ற தேவ பக்தன் அழிந்துபோகும் ஆத்துமாக்களைக் குறித்து பெரிதும் புலம்பிய ஒரு பரிசுத்த வாட்டியைக் குறித்து இப்படிப் பேசுவார்:- அம்மையார் “ஆண்டவரே, எனது சரீரத்தையும், எனது ஆத்துமாவையும் கொண்டு நஷ்டப்பட்ட ஆத்துமாக்கள் நரக பாதாளத்திற்குச் செல்லும் துவாரத்தை மூடிப்போடும்” என்று அழுவார்களாம் பரிசுத்தவான் தாமஸ் புரூக்ஸ்